Posts

Showing posts from July, 2023

ஸபர் மாதம் பீடை மாதமா

Image
  ஸபர் மாதம் பீடை மாதமா,?? யானைக்கு தும்பிக்கை எப்படியோ,! மனிதனுக்கு நம்பிக்கை அப்படி.! நம்பிக்கை எனும்போது ...! இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும் ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது. மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த 24ம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம். எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..  உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது. ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை. தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் பித்அத்துகளை தோற்றுவிக்காத அந்த நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப்

ஸபர் மாதம் இஸ்லாமிய மாதங்களில் இர‌ண்டாவது மாதம்

Image
  இஸ்லாமிய மாதங்களில் இரண்டாவது 'ஸபர்' மாதத்தில் நாம் இப்போது இருக்கின்றோம்,!! ஒரு ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்களாகும். வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். இது இறைவன் விதித்த நியதி. ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடங்கி இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் வரை அனைத்து நபிமார்களின் சமூகத்தாருக்கும் மாதங்களை இவ்வாறு தான் அல்லாஹ் அமைத்தான். வருடத்துக்கு 12 மாதங்கள் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. வானம் பூமி படைக்கப்பட்ட நாள்முதல் இது தான் நடைமுறை என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பன்னிரெண்டுதான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே, இவற்றில் நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்.  (அல்குர்ஆன் 9:36) இஸ்லாமிய மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இஸ்லாமிய மாதங் களில் இரண்டாவது 'ஸபர்' மாதம் ஆகும். ஸபர் மாதம் 'ஸபர

துல்ஹஜ் மாதம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் மறைவு நினைவு நாள்,

Image
 இஸ்லாமிய வரலாற்றின் காலச்சுவடு . அமீருல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தளபதி) உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மறைவு நினைவு நாள், துல்ஹஜ் மாதத்தின் இறுதி நாளில் மூன்றாம் கலீபா உஸ்மான் (ரலி]  அவர்களை அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள்.  உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சிகள் யாவும், தேச விரோதச் செயல்களாகும்.    இதில் கொடுமை என்னவென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னணித் தோழர்களில் சிலர் இந்தக் கொடுமைக்காரர்களின் சதிவலைகளில் வீழ்ந்துள்ளார்கள், இன்னும் எதிரிகளுக்கு மறைமுகமாக உதவியும் செய்துள்ளார்கள், கொலைக்கு பின் ஆட்சியிலும் அமர்ந்து விட்டார்கள், கொலை செய்தவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது, என்பதே கவலையளிக்கும் செய்தியாகும். கலவரக்காரர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டினை முற்றுகை இட்டார்கள். அவரது வீட்டுக் கதவருகே முழு ஆயுதபாணிகளாக நின்றார்கள். அவரது வீட்டிற்குள் உணவு, தண்ணீர் என்று எதனையும் கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் தனது சொந்தப் பணத்தில் இருந்து வாங்கிய கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து எடுத்து வரக் கூ

துல்ஹஜ் மாதம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் மறைவு நினைவு நாள்,

Image
  இஸ்லாமிய வரலாற்றின் காலச்சுவடு . அமீருல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தளபதி) கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மறைவு நினைவு நாள், ஹஜ்ஜின் கடைமைகளை முடித்து மதீனா திரும்பிய கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பள்ளியில் ஒருநாள் துல்ஹஜ் மாதத்தின் 26ம் பிறை மறைந்து, 27ம் பிறை காலை பொழுது புலர்ந்துகொண்டிருந்தது என்றும் போல் அன்றும் காலைத் தொழுகையை கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நடத்திகொண்டிருந்த போது அபூ லூலு என்றழைக்கப்பற்ற பைரோஸ் என்னும் நிஹாவந்தை சேர்ந்த ஒரு மஜூசி முஸ்லிம்களைப் போல் வேடம் தரித்து தொழுகை அணியில் இருந்தான். திடீரென பாய்ந்து கலீஃபா அவர்களின் உடலில் தனது குறு வாளால் குத்தினான். அடுத்தடுத்து மூ‌ன்று முறைகள் குத்தினான். அடிவயிற்றில் பட்ட ஆழமான தாக்குதல் கலீஃபா அவர்களை அயரச்செய்தது. சற்று பின் நகர்ந்து தன் பின்னே நின்ற அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரம் பற்றி தொழுகை நடத்துமாறு முன் நகர்த்தி விட்டு கீழே சாய்ந்தார்கள். அணியில் தொழுதுகொண்டிருந்த ஸஹாபாக்கள் திடுக்கிட்டு அந்த வெறியன் பைரோஸை பிடிக்க பாய்ந்தார்கள். அந்த வெறியன்

துல்ஹஜ் மாதம் குர்பானி கொடுப்பவர் கடைப்பிடித்து பேணவேண்டிய ஒழுக்கங்குகள்,!

Image
  குர்பானி கொடுப்பவர் கடைப்பிடித்து பேணவேண்டிய  ஒழுங்குகள்,! .                       🐏🐑🐐🐪🐫🐄🐃🐂🦬 இஸ்லாமிய நாள்காட்டி ஹிஜ்ரி  1445 ம் ஆண்டுக்கான துல்ஹஜ் மாதத்தில் குர்பானி கொடுக்க எண்ணியிருப்பவர் துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களில் தலைமுடியையோ நகங்களையோ களைவது கூடாது. தலைமுடி. நகங்கள். அக்குள். மற்றும் மர்மஸ்தான. முடி அகற்றி கொள்வதற்கான கடைசி நாள் .                    இன்ஷா அல்லாஹ்     ஹிஜ்ரி  (1445) துல்ஹஜ் மாதத்தின் முதல்பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான   06/06/2024     வியாழக்கிழமை   கடைசி நாள் பிறை தென்படவில்லை என்றால் 07/06/2024   வெள்ளிகிழமை  கடைசி நாள் அறபுத் தீபகற்பம்,   ஹிஜ்ரி (1445) துல்ஹஜ் மாதத்தின் முதல்பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான   07/06/2024   வெள்ளிகிழமை கடைசி நாள் பிறை தென்படவில்லை என்றால்               08/06/2024 சனிக்கிழமை  கடைசி நாள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலம் அண்டை நாடுகள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்ற

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

Image
  துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது,??? ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும். இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ❗️பிறை 9 அன்று நோற்கும்படியும்   (மற்றும் ஓர் அறிவிப்பில்) ❗️அரஃபா நாளில் நோன்பு நோற்கும்படியும்) நபி(ஸல்)அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.  🔴 ஆதாரம் 1 துல்ஹஜ் மாதம் பிறை 9 ❗️ "துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று                         அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:முஸ்லிம்(2151) 🔴 ஆதாரம் 2 அரஃபா நாளில் ,❗️ அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.  அ

திருக்குர்ஆனை ஒரு முறை படித்து விட்டு சொல்லுங்கள்.!!!

Image
#திருக்குர்ஆனை_ஒரு_முறை #படித்து_விட்டு_சொல்லுங்கள்.!!!   📕குர்ஆன் இறைவனின் வேதம் இல்லை.!!   📗குர்ஆனில் ஆபாசம் உள்ளது.!!   📘திருக்குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிக்கிறது...!!   📙திருக்குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களை கொள்ளச் சொல்கிறது...!!   📓 திருக்குர்ஆன் பெண் அடிமைத்தனத்தை போதிக்கிறதா...!!   📒திருக்குர்ஆனில் உள்ள குறைகளை.! துருவி.! ஆராய.! மற்றும் தவறுகளை.! சுட்டிக் காட்ட விரும்புவோர்.!   🌍 உலகில் உள்ள அனைத்து அரசும் மக்களும் முஸ்லிம்களை ஒடுக்க நினைப்பது ஏன்...???   📗 திருக்குர்ஆனை 📖 படித்து விட்டு சொல்லுங்கள்.!!!   📚 திருக்குர்ஆன் 📖 தமிழாக்கம் இலவச பிரதி பெற உங்கள் 🏠 விலாசத்தை 💬 comment-ல் ✍️ பதிவிடவும் அல்லது வாட்ஸ் அப்ல் அனுப்பவும் - 📱📲 0096598832767 என் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே அதிக அதிகமாக ஷேர் செய்யவும்

முஹர்ரம் மாதம் ஆஷூரா நோன்பு பற்றி நினைவூட்டல்

Image
முஹர்ரம் மாதம் ஆஷூரா நோன்பு பற்றி நினைவூட்டல் ஹிஜ்ரி 1446 ம் ஆண்டுக்குரிய ஆஷூரா நோன்பு பற்றி நினைவூட்டல் !!  🔵 இன்ஷா அல்லாஹ், வளைகுடா நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு,  வருகின்ற ஜூலை மாதம்,15/07/2024 முஹர்ரம் 9 திங்கள் கிழமை, மற்றும் 16/07/2024 முஹர்ரம் 10 செவ்வாய் கிழமை, ஆகிய இரு தினங்கள் முஹர்ரம் [ 1446 ] க்கு ஆனா ஆஷூரா நோம்பு நோற்க வேண்டிய நாளாகும்,   🔵 [ முந்தைய நாளான 14/07/2024  ஞாயிற்றுக்கிழமை இரவு சஹர் 🥗🍝🍪🥛செய்யவேண்டும் ]   🔴 இன்ஷா அல்லாஹ், தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கு வருகின்ற ஜூலை மாதம்,16/07/2024 முஹர்ரம் 9 செவ்வாய் கிழமை, மற்றும் 29/07/2024 முஹர்ரம் 10 புதன்கிழமை  ஆகிய இரு தினங்கள் முஹர்ரம் [ 1446 ] க்கு ஆனா ஆஷூரா நோம்பு நோற்க வேண்டிய நாளாகும்,   🔴 [ முந்தைய நாளான 15/07/2024  திங்கள் கிழமை இரவு சஹர்🥗🍝🍪🥛 செய்யவேண்டும் ]  ஆஷூரா நோன்பின் சிறப்பு !!   அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: ”ஆஷூரா நோன்பைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்த நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன் சென்ற ஒரு வருடத்தின் பாவங்களை அழிக்கிறது என்று கூறினார்கள். (ம

முஹர்ரம் மாதம் ஆஷுரா நோன்பும் அதன் நான்கு கட்டங்களும்

Image
ஆஷுரா நோன்பும், .   🔹️அதன் 🔹️  நான்கு கட்டங்களும்:   🔹️ கட்டம்:-1️⃣ அறியாமைக் கால மக்களும் ஆஷுரா நோன்பும்.!!!   ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்று வந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்படும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் “முஹர்ரம் பத்தாவது நாளில் விரும்பியவர் (ஆஷூரா) நோன்பு நோற்கட்டும்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிடட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி- 1893-முஸ்லிம்2071)  ஆயிஷா(ரலி) அறிவித்தார். ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமழானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ‘(ஆஷுராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டு விட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி :

முஹர்ரம் ஷியாக்களின் நடைமுறையும் சுன்னத் வல் ஜமாஅத்தும்

Image
ஷியாக்களின் நடைமுறையும், .   சுன்னத் வல் ஜமாஅத்தும்,   பஞ்சாவும் அதையொட்டிய அனைத்துக் காரியங்களும் வணக்கம் என்ற பெயரால் மக்களிடம் திணிக்கப் பட்டு விட்ட புதுக் காரியங்களாகும். இவை நிச்சயமாக வழிகேடுகள். இந்த வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். நரகத்திற்குக் கொண்டு செல்லும் இந்தக் காரியங்களைத் தான் இவர்கள் அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.   இவர்களின் தொழுகை, நோன்பு, வணக்க வழிபாடுகள், சட்ட திட்டங்கள் ஆகியவை அனைத்தும் முற்றிலும் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான முறையிலேயே அமைந்திருக்கும்   ● பூ மிதித்தல் தீ கொளுத்துதல் ●   ஆஷூரா தினத்திற்காக ஒரு துண்டுப் பிரசுரத்தில் பூ மிதித்தல், பெயர் தான் பூ மிதித்தல். ஆனால் உண்மையில் அது தீ மிதித்தல் ஆகும். கோயில் கொடைகளில் தீ மிதித்தல் திருவிழா நடைபெறுவது போன்று இந்தப் பஞ்சாவிலும் நடைபெறுகின்றது. நவராத்திரி என்ற பெயரில் தீபமேற்றுதல் போன்ற தீக்கொளுத்தும் சமாச்சாரங்கள் பஞ்சா தினத்திலும் அரங்கேறுகின்றன. பஞ்சாவில் சிலம்பாட்டம் ஆடுவோர் மண்ணெண்ணையை வாயில் ஊற்றிக் கொண்டு தீ ஊதுதல், தீ வளையங்களைச் சுற்றுதல் போன்ற சாகசங்களைச் செய்வார்கள்.   ● சப்

முஹர்ரம் மாதம்.! அல்லாஹ்வின் மாதமா.? சைத்தானின் மாதமா.?

Image
முஹர்ரம் மாதம்.! அல்லாஹ்வின் மாதமா.?  சைத்தானின் மாதமா.?   முஸ்லிம்களே.! ஈமான் கொண்டவர்களே.!  சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதனே.! சிந்திப்பீராக.! திருத்திக் கொள்வீராக.!  புனிதமிக்க நான்கு மாதங்களான துல்கஅதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப்ஆகும். (புகாரி:3025)   ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் சிறந்தவை இந்த நான்கு மாதங்களாகும். இந்த சிறந்த நான்கு மாதங்களில் மிகச் சிறந்தது முஹர்ரம் மாதம் ஆகும்.   அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: “நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இரவின் எந்தப் பகுதி சிறந்தது? இன்னும் மாதங்களில் எது சிறந்தது?” எனக் கேட்டேன். நபி (ஸல்) கூறினார்கள்: “இரவில் சிறந்தது அதன் நடுப்பகுதி. மாதங்களில் மிகச் சிறந்தது நீங்கள் முஹர்ரம் என்று அழைக்கின்ற அல்லாஹ்வுடைய மாதமாகும்.” (நசாயி:4612)   இந்தப் புனிதமிக்க அல்லாஹ்வுடைய மாதத்தை சீர்குலைக்க சைத்தான் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றான். ▪️புத்தாண்டு என்ற பெயரிலும்  ▪️அசேன் உசேன் ஷஹீத் தாக்கப்பட்ட மாதம் துக்க நாளாக அனுசரிப்பதும்.  மாற்றுமத கலாச்சாரமான ▪️பிள்ளையார் சதுர்த்தியை போன்று மூலை மூலைக்

முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம்.

Image
அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம்.  முஹர்ரம்: இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் இது. அத்துடன், அல்லாஹ் புனிதமாதமாக்கிய சிறப்புற்ற நான்கு மாதங்களில் ஒரு மாதமாகும்,   ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடங்கி இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் வரை அனைத்து நபிமார்களின் சமூகத்தாருக்கும் மாதங்களை இவ்வாறு தான் அல்லாஹ் அமைத்தான். வருடத்துக்கு 12 மாதங்கள் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. வானம் பூமி படைக்கப்பட்ட நாள்முதல் இது தான் நடைமுறை என்று அல்லாஹ் சொல்கிறான்.   அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பன்னிரெண்டுதான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே, இவற்றில் நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன் 9:36)   ஆண்டின் எல்லா மாதங்களிலும் பாவம் செய்வது தடுக்கப்பட்டதுதான். இருப்பினும் இந்த நான்கு புனித மாதங்களில் பாவம் செய்வது மேலும் கடுமையான குற்றமாகும்.  காலம் மற்றும் இடத்தின் ப

முஹர்ரம் மாதம் விரைவில் வரும் முஹர்ரம் புனித மாதமா அனாசாரங்களின் மாதமா

Image
Coming_soon 💥 விரைவில்_வரும் முஹர்ரம்_புனித_மாதமா, !? அனாசாரங்களின்_மாதமா, !?   இன்று முஸ்லிம்களில் பலர் இந்த மாதத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் போதிக் காத, நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் செய்யாத சடங்குகளை செய்கின்றனர்.   • “பஞ்சா” என்று கை வடிவத்தில் அலங்கரித்து வைப்பது,   • அதைப் புனிதமாக கருதுவது, அதற்கு வழிபாடுகள் செய்வது,   • உடலைக் கிழித்துக் கொள்வது, மாரடிப்பது,   • யா அலி! யா ஹுஸைன்! என்று கத்துவது,  • பஞ்சா உடன் ஜோடிக்கப்பட்ட வீடு போன்றவற்றை வீதிகளில் இழுத்துக் கொணடு உலா வருவது,   • இந்த பத்து நாட்களில் கணவன் மனைவி பிரிந்து இருப்பது,   • பத்தாவது நாளன்று தீ மிதிப்பது, உடலை அலங்கோலப்படுத்துவது,   • விசேஷமாக உணவு சமைத்து பரிமாறுவது…   இந்த பத்தாவது நாளை துக்க நாளாக அணுஷ்டிக்கின்றனர். ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக அந்நாளில் பல நூதன சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கின்றனர். இப்படி செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், இந்த செயல்கள் மாற்று மத சடங்குகளுக்கு ஒப்பானவை என்பதால் பெரும் குற்ற செயல்களாகவே மார்க்கத்தில் கருதப்படும்.