முஹர்ரம் ஷியாக்களின் நடைமுறையும் சுன்னத் வல் ஜமாஅத்தும்


ஷியாக்களின் நடைமுறையும், .  
சுன்னத் வல் ஜமாஅத்தும், 

 பஞ்சாவும் அதையொட்டிய அனைத்துக் காரியங்களும் வணக்கம் என்ற பெயரால் மக்களிடம் திணிக்கப் பட்டு விட்ட புதுக் காரியங்களாகும். இவை நிச்சயமாக வழிகேடுகள். இந்த வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். நரகத்திற்குக் கொண்டு செல்லும் இந்தக் காரியங்களைத் தான் இவர்கள் அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். 

 இவர்களின் தொழுகை, நோன்பு, வணக்க வழிபாடுகள், சட்ட திட்டங்கள் ஆகியவை அனைத்தும் முற்றிலும் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான முறையிலேயே அமைந்திருக்கும் 

 ● பூ மிதித்தல் தீ கொளுத்துதல் ● 

 ஆஷூரா தினத்திற்காக ஒரு துண்டுப் பிரசுரத்தில் பூ மிதித்தல், பெயர் தான் பூ மிதித்தல். ஆனால் உண்மையில் அது தீ மிதித்தல் ஆகும். கோயில் கொடைகளில் தீ மிதித்தல் திருவிழா நடைபெறுவது போன்று இந்தப் பஞ்சாவிலும் நடைபெறுகின்றது. நவராத்திரி என்ற பெயரில் தீபமேற்றுதல் போன்ற தீக்கொளுத்தும் சமாச்சாரங்கள் பஞ்சா தினத்திலும் அரங்கேறுகின்றன. பஞ்சாவில் சிலம்பாட்டம் ஆடுவோர் மண்ணெண்ணையை வாயில் ஊற்றிக் கொண்டு தீ ஊதுதல், தீ வளையங்களைச் சுற்றுதல் போன்ற சாகசங்களைச் செய்வார்கள். 

 ● சப்பர அணிவகுப்பு ● 

 ஆஷுரா பத்தாம் நாளில் பஞ்சா அணிவகுப்பு நடைபெறும். இந்துக்களின் கோயில் திருவிழாவில் நடப்பதைப் போன்று அலங்கரிக்கப் பட்ட சப்பரத்தை, தெருத்தெருவாக இழுத்துச் செல்வது தான் இங்கு பஞ்சா ஊர்வலமாக நடைபெறுகின்றது. 

 ● கொலு வைத்தல் ● 

 இந்துக்கள் கொலு வைப்பதைப் போல் பஞ்சாவும் பந்தாவாக தனது ஆலயத்தில் அலுவலகத்தில் பரேலவிச பக்தர்கள் பத்து நாள் தரிசனத்திற்காக திறந்து கொலுவாகக் காட்சியளிக்கும். 

 தடைக்குள்ளாகும் மாமிசம் – மனைவி

 இந்துக்கள் சில நாட்களில் கறி மீன் சாப்பிட மாட்டார்கள். மனைவிடம் உடலுறவுக்தடை முஹர்ரம் பத்து நாட்களில் பரேலவிச பூசாரிகள் புத்திசாலித்தனமாக மீனை மட்டும் தடுத்துக் கொண்டார்கள்.மனைவிடம் உடலுறவுக்தடை 

 அடுத்து, முஹர்ரம் ஊர்வலம், விநாயகர் ஊர்வலத்தைப் போன்று கலவரங்களை உருவாக்கி விடுகின்றது. (23.10.2015) அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலமங்கலத்தில் நடைபெற்ற பஞ்சா ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. விநாயகர் ஊர்வலத்தில் நடப்பது போன்று கலவரங்கள் நடப்பதாலும் இந்தப் பஞ்சா ஊர்வலம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

 இந்தியாவில் உள்ள சூழ்நிலை கலவர மேகமாகவே உள்ளது. ஒரு சிறு பொறியும் பெருந்தீயாக மாறும் அபாயம் உள்ளது. இந்துத்துவா சக்திகள் சந்து முனை இடை வெளியில் கந்தகப் பொடி தூவி, கலவரத்தீயை மூட்டுவதற்கு அனுதினமும் ஆயத்தமாக இருக்கின்றர். எனவே இதுபோன்ற தேவையற்ற ஊர்வலங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

 பஞ்சா முடிந்ததும் அதை ஆற்றில் கொண்டு போய்க் கரைப்பதைப் பார்க்கிறோம். அதுபோல் விநாயகர் சிலைகளையும் ஆற்றில் கொண்டு போய் கரைப்பார்கள். அனேக, அதிகமான அனாச்சாரங்கள் இந்து மதத்திலிருந்து முஸ்லிம்கள் காப்பியடித்ததாக இருக்கும். ஆனால் விநாயகர் ஊர்வலமோ பஞ்சா ஊர்வலத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட அனாச்சாரமாகும். எது எப்படியோ இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள்; அனாச்சாரங்கள். 

 நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ 1560 

 இதில் வேடிக்கை என்னவென்றால் ஹஸன், ஹுசைன் பெயரில் இந்தப் பத்து நாட்களும் ஓதும் மவ்லிதில், ஒளி வீசும் ஹுசைனின் கைகளை வரைந்தவர்களின் கைகள் நாசமாகட்டும் என்ற கவிதை வரிகளையும் ஒரு பக்கம் ஓதிக் கொள்வது தான். இந்த ஹஸன், ஹுசைன் மவ்லிதும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கருத்துக்களைத் தாங்கியதாகும். இதுவும் ஒரு பித்அத் ஆகும். . 

 சுன்னத் வல் ஜமாஅத் . ஆலிம்களின் பங்கு. 

 ஆலிம்கள் எனப்படுவோர் இந்தப் பஞ்சா எனும் வழிகேட்டைப் பற்றி ஜும்ஆ மேடைகளில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கு இவர்கள் தயாரில்லை. அது போன்ற கருத்துக்களை இவர்கள் முன் வைப்பதுமில்லை. முஹர்ரம் மாதத்தில் ஜும்ஆ மேடைகளில் பஞ்சா எனும் வழிகேட்டைக் கண்டித்துப் பேசாமல், மூஸா (அலை) அவர்களின் உண்மை வரலாற்றையும் ஆஷூரா நோன்பின் சிறப்பும் கூறாமல், கர்பலாவின் கதைகளை அள்ளித் தெளித்து விட்டுச் சென்று விடுகின்றனர். அது பஞ்சாவுக்கு உரமாகி விடுகின்றது. தவ்ஹீதுவாதிகளை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகளில் கடுகளவு முயற்சியைக் கூட
 இந்தப் பஞ்சாவிற்கு எதிராக எடுக்கவில்லை. இவ்வாறு இவர்கள் முயற்சி எடுக்காமல் இருப்பதற்குக் காரணமும் இருக்கின்றது.

 இந்தப் பஞ்சா என்பது ஷியாக்களின் நடைமுறை என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் சொல்லிக் கொண்டாலும் இவர்களிடம் குடி கொண்டிருப்பதும் ஷியாக் கொள்கைதான். இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள், தனியார் அடக்கஸ்தளம் (தர்ஹா) ஜிஹாரத் செய்ய போகலாம், மவ்லிதுகள், என்ற நாசகார நம்பிக்கை இருந்தால் போதும். அங்கு ஷியாயிஸம் நிச்சயமாகக் குடி கொண்டிருக்கும். அந்தக் கொள்கையில் இந்த, ஆலிம் படைகளும் ஒன்றுபட்டே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இருந்து கொண்டு இவர்களால் ஒரு போதும் பஞ்சாவை ஒழிக்க முடியாது. அதனால் தான் அது இவ்வளவு நாளும் ஒழியாமல், ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 

 நிச்சயமாக இந்தப் பஞ்சாக்கள் ஒழியப் போவது இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவத்தின் மூலம் தான். இறையருளால் அது நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இன்ஷா அல்லா

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்