முஹர்ரம் மாதம் ஆஷூரா நோன்பு பற்றி நினைவூட்டல்


முஹர்ரம் மாதம் ஆஷூரா நோன்பு பற்றி நினைவூட்டல்

ஹிஜ்ரி 1446 ம் ஆண்டுக்குரிய ஆஷூரா நோன்பு பற்றி நினைவூட்டல் !!

 🔵 இன்ஷா அல்லாஹ், வளைகுடா நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு, வருகின்ற ஜூலை மாதம்,15/07/2024 முஹர்ரம் 9 திங்கள் கிழமை, மற்றும் 16/07/2024 முஹர்ரம் 10 செவ்வாய் கிழமை, ஆகிய இரு தினங்கள் முஹர்ரம் [ 1446 ] க்கு ஆனா ஆஷூரா நோம்பு நோற்க வேண்டிய நாளாகும், 

 🔵 [ முந்தைய நாளான 14/07/2024 ஞாயிற்றுக்கிழமை இரவு சஹர் 🥗🍝🍪🥛செய்யவேண்டும் ] 

 🔴 இன்ஷா அல்லாஹ், தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கு வருகின்ற ஜூலை மாதம்,16/07/2024 முஹர்ரம் 9 செவ்வாய் கிழமை, மற்றும் 29/07/2024 முஹர்ரம் 10 புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் முஹர்ரம் [ 1446 ] க்கு ஆனா ஆஷூரா நோம்பு நோற்க வேண்டிய நாளாகும், 

 🔴 [ முந்தைய நாளான 15/07/2024 திங்கள் கிழமை இரவு சஹர்🥗🍝🍪🥛 செய்யவேண்டும் ]

 ஆஷூரா நோன்பின் சிறப்பு !!

 அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: ”ஆஷூரா நோன்பைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்த நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன் சென்ற ஒரு வருடத்தின் பாவங்களை அழிக்கிறது என்று கூறினார்கள். (முஸ்லிம்:2151)

 “உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே இந்த -ரமளான்- மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை” என்று விடையளித்தார்கள். (புகாரி-2006- முஸ்லிம்- 2086) 

 ”ஆஷூரா நோன்பைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்த நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன் சென்ற ஒரு வருடத்தின் பாவங்களை அழிக்கிறது என்று கூறினார்கள். (முஸ்லிம்) 

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமழான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2157

 இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நம் வாழ்வில் நாம் தெரிந்தும் தெரியாமலும் நிறைய பாவங்களை செய்து கொண்டிருக்கின்றோம், இந்த 1446-ம் ஆண்டின் முஹாரம் மாதம் ஒன்பது, பத்தாம் நாளில் இந்த ஆஷூரா நோன்பை நோற்போம் மற்றும் நம் குடும்பத்தாரையும் நண்பர்களையும் இந்த ஆஷூரா நோன்பை நோற்க நினைவூட்டுவோம் நாம் சிறு பாவங்களை அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக ஆமின்,

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்