ஸபர் மாதம் பீடை மாதமா

 

ஸபர் மாதம் பீடை மாதமா,??

யானைக்கு தும்பிக்கை எப்படியோ,!

மனிதனுக்கு நம்பிக்கை அப்படி.!

நம்பிக்கை எனும்போது ...!

இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும்

ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது.

மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த 24ம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம்.

எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..

 உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது.

ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை.

தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் பித்அத்துகளை தோற்றுவிக்காத அந்த நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான்,  முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள். (புகாரி-3456)

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.

குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.

இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.

இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் ● கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் ● புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.

ஸபர் குளி என்ற பெயரில் ● ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.

ஸஃபர் மாதத்தில்  இறுதி புதனன்று எண்ணை தேய்த்து குளித்துவிட்டு, விவரமறியாத அல்லது மார்க்கத்தை பிழைப்பாக்கிக் கொண்டிருக்கும் அறிஞர்களிடம் சென்று  ● மா இலைகளில அல்லது ● பளிங்கு தட்டில் ஸலாமுன் கவ்லன் மின் ரப்பிர் ரஹீம் என்ற வசனத்தை எழுதி அதைக் கரைத்துக் குடிக்கிறார்கள். உடலிலும் பூசிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதனால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.

இது அறிவுக்கு பொருந்துகிறதா என்று ஒருகணம் சிந்தியுங்கள்,  

இன்னும் சிலர் இந்த நாளில் வாழை இலைகளிலோ அல்லது பனை ஓலைகளிலோ திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லீம்களிடம் இருந்து வருகிறது.

இன்னும் சிலர் ஸபர் மாதம் 13 ம் தே‌தி குளித்து வீட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கு ஒரு தட்டில் அரிசி முட்டை வைத்து தன் கையால் தொட்டு ஒரு ஏழைகளுக்கு வழங்கி விடுகிறார்கள்,தமக்கு ஏற்பட்ட முசிபத்தில் இருந்து விடுதலைக்காக பரிகாரமாம்,

இன்னும் சிலர் ஸபர் மாதம் 13 ம் தேதி வரை வீட்டுக்கு தேவையான புது பொருட்கள் புது துணிமணிகள் நிலம் வீடு வாங்குவது விற்பது போன்றவற்றை தவிர்த்து விடுகிறார்கள், மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.

இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.

பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)

சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.         திருக்குர்ஆன் 64:11

ஸஃபர் மாதத்தின் அத்துனை அனாச்சாரங்களும் அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித்தரவில்லை. அப்படி காட்டித்தராத விசயங்களை செய்பவர்களைப்பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பளர் : ஆயிஷா(ரலி) நூல் : புகாரி.2697

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்)இந்த பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும்.

வல்ல ரஹ்மான் நம்மை மூட நம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி அவன் மீது முழுமையான ஈமான் வைத்து, உண்மையான ஈமானுடன் மரணிக்கும் பாக்கியத்தை அனைவர்க்கும் தந்தருள்வானாக !! ஆமீன் !



You Tube - Linke


Facebook Groups - Linke


Instagram - Linke


Twitter - Linke

Telegram - Link

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்