முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம்.


அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம்.

 முஹர்ரம்: இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் இது. அத்துடன், அல்லாஹ் புனிதமாதமாக்கிய சிறப்புற்ற நான்கு மாதங்களில் ஒரு மாதமாகும்,

  ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடங்கி இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் வரை அனைத்து நபிமார்களின் சமூகத்தாருக்கும் மாதங்களை இவ்வாறு தான் அல்லாஹ் அமைத்தான். வருடத்துக்கு 12 மாதங்கள் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. வானம் பூமி படைக்கப்பட்ட நாள்முதல் இது தான் நடைமுறை என்று அல்லாஹ் சொல்கிறான். 

 அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பன்னிரெண்டுதான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே, இவற்றில் நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன் 9:36) 

 ஆண்டின் எல்லா மாதங்களிலும் பாவம் செய்வது தடுக்கப்பட்டதுதான். இருப்பினும் இந்த நான்கு புனித மாதங்களில் பாவம் செய்வது மேலும் கடுமையான குற்றமாகும்.

 காலம் மற்றும் இடத்தின் புனிதத்திற்கு ஏற்ப அதில் பாவம் செய்வதும் பெரும் குற்றமாகிவிடுகிறது. எப்படி மக்காவில் பாவம் செய்வது ஏனைய இடங்களில் பாவம் செய்வதைவிட கடுமையானதோ அதுபோன்றே புனித மாதங்களில் பாவம் செய்வதும் கடுமையானதாகும். புனிதமான நான்கு மாதங்களாவன 

 துல்கஅதா, துல் ஹஜ், முஹர்ரம், ரஷப் ஆகும். (புகாரி:3025) 

 ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களில் சிறந்தவை இந்த நான்கு மாதங்களாகும். இந்த சிறந்த நான்கு மாதங்களில் மிகச் சிறந்தவை முஹர்ரம் மாதம் ஆகும். 

 அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: “நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இரவின் எந்தப் பகுதி சிறந்தது? இன்னும் மாதங்களில் எது சிறந்தது?” எனக் கேட்டேன். நபி (ஸல்) கூறினார்கள்: “இரவில் சிறந்தது அதன் நடுப்பகுதி. மாதங்களில் மிகச் சிறந்தது நீங்கள் முஹர்ரம் என்று அழைக்கின்ற அல்லாஹ்வுடைய மாதமாகும்.” (நசாயி:4612) 

 அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியன. அவனுடைய தூதர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீது ஸலாதும், ஸலாமும் நிலவுக! 

 நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208) 

 இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 4:13) 

 அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி நடத்த போதுமானவன்…

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்