துல்ஹஜ் மாதம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் மறைவு நினைவு நாள்,


 இஸ்லாமிய வரலாற்றின் காலச்சுவடு

. அமீருல் முஃமினீன்

(நம்பிக்கையாளர்களின் தளபதி)

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு)

அவர்களின் மறைவு நினைவு நாள்,


துல்ஹஜ் மாதத்தின் இறுதி நாளில் மூன்றாம் கலீபா உஸ்மான் (ரலி]

 அவர்களை அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். 


உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சிகள் யாவும், தேச விரோதச் செயல்களாகும்.

  

இதில் கொடுமை என்னவென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னணித் தோழர்களில் சிலர் இந்தக் கொடுமைக்காரர்களின் சதிவலைகளில் வீழ்ந்துள்ளார்கள், இன்னும் எதிரிகளுக்கு மறைமுகமாக உதவியும் செய்துள்ளார்கள், கொலைக்கு பின் ஆட்சியிலும் அமர்ந்து விட்டார்கள், கொலை செய்தவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது, என்பதே கவலையளிக்கும் செய்தியாகும்.


கலவரக்காரர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டினை முற்றுகை இட்டார்கள். அவரது வீட்டுக் கதவருகே முழு ஆயுதபாணிகளாக நின்றார்கள். அவரது வீட்டிற்குள் உணவு, தண்ணீர் என்று எதனையும் கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் தனது சொந்தப் பணத்தில் இருந்து வாங்கிய கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து எடுத்து வரக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.


 அந்தக் கலவரக்காரர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டு பின்பக்கம் ஆக உள்ளே நுழைந்து அதில் ஒருவர் முஹம்மது பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் தாடியைப் பற்றி இழுத்தார். கலவரக்காரர்களில் ஒருவர் உஸ்மான் (ரலி) அவர்களின் தலை மீது ஓங்கி அடி கொடுத்தார், அதன்பின் உஸ்மான் (ரலி) நினைவற்ற கீழே விழுந்தார்கள். 


இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்


அதற்குப்பின் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு ஜனாஜா தொழுகை நடத்தக்கூட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னணித் தோழர்கள்

 கூட முன் வரவில்லை ஜன்னத்துல் பக்கியில் கூட அடைக்கலம் பண்ண அனுமதி தரவில்லை ஜன்னத்துல் பக்கி அருகில் இருந்த அவருடைய சொந்தமான தோட்டத்தில் மூன்று நான்கு நாட்களுக்கு பின் அடைக்கலம் பண்ண ஆட்களும் இல்லாமல் அவருடைய மனைவி மகள் என பெண்களும் ஆண்களும் குறைந்தபட்சம் 15 நபர்கள் கூட இல்லை கலவரக்காரர்களுக்கு பயந்து இரவோடு இரவாக அவரை புதைக்கப்பட்டார்கள் மூன்றாவது கலிபா உதுமான் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட நிலை இஸ்லாமிய வரலாற்றில் கருப்பு நாள்


உதுமான் (ரலி) அவர்களின் ஆத்மா மீது அல்லாஹ் கருணை புரிவானாக!

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்