முஹர்ரம் மாதம்.! அல்லாஹ்வின் மாதமா.? சைத்தானின் மாதமா.?


முஹர்ரம் மாதம்.! அல்லாஹ்வின் மாதமா.?  சைத்தானின் மாதமா.? 

 முஸ்லிம்களே.! ஈமான் கொண்டவர்களே.!

 சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதனே.! சிந்திப்பீராக.! திருத்திக் கொள்வீராக.!

 புனிதமிக்க நான்கு மாதங்களான துல்கஅதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப்ஆகும். (புகாரி:3025) 

 ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் சிறந்தவை இந்த நான்கு மாதங்களாகும். இந்த சிறந்த நான்கு மாதங்களில் மிகச் சிறந்தது முஹர்ரம் மாதம் ஆகும். 

 அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: “நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இரவின் எந்தப் பகுதி சிறந்தது? இன்னும் மாதங்களில் எது சிறந்தது?” எனக் கேட்டேன். நபி (ஸல்) கூறினார்கள்: “இரவில் சிறந்தது அதன் நடுப்பகுதி. மாதங்களில் மிகச் சிறந்தது நீங்கள் முஹர்ரம் என்று அழைக்கின்ற அல்லாஹ்வுடைய மாதமாகும்.” (நசாயி:4612) 

 இந்தப் புனிதமிக்க அல்லாஹ்வுடைய மாதத்தை சீர்குலைக்க சைத்தான் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றான். ▪️புத்தாண்டு என்ற பெயரிலும்
 ▪️அசேன் உசேன் ஷஹீத் தாக்கப்பட்ட மாதம் துக்க நாளாக அனுசரிப்பதும். 
மாற்றுமத கலாச்சாரமான ▪️பிள்ளையார் சதுர்த்தியை போன்று மூலை மூலைக்கு பஞ்சா என்ற சிலைகளை வைத்து மேளம் தாளம் குத்தாட்டம் கச்சேரி என வழிபடுவது.
 ▪️ முருகனுக்கு வேல் குத்துவது போல் தனக்குத் தானே தாக்கி கொள்வது காயப்படுத்திக் கொள்வது. 
 மாற்று மதக் கலாச்சாரம் ▪️நெருப்பு மிதிப்பதை போன்று ஒரு வேண்டுதலாக பத்து நாள் நோன்பு நோற்று நெருப்பு விதிப்பது.
 ▪️ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பதுபோல் முஹரம் மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது ▪️திருமணங்களுக்கும் தடை விதிப்பது 
 ▪️யா அல்லாஹ் என்று அழைக்கும் நாவினால். யா அலி! யா ஹசேன்! யா உசேன்! என்று உச்சரிக்க செய்வது. 
 ▪️ இவர்களின் பெயரால் உணவு வினியோகம் செய்வது 
▪️இவர்களின் பெயரால் மௌலிது ஓதுவது

 இது போன்ற மாற்று மத கலாச்சாரங்களை விட்டொழிப்போம், அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.

 மூஸா(அலை)அவர்களுக்குக் கிடைத்த வெற்றி நாளான வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த முஹர்ரம் பத்தாம் நாளின் உண்மையான சிறப்பு மறக்கடிக்கப்பட்டு, தன்னைத்தானே காயப்படுத்தி இரத்தக் காணிக்கை செலுத்துவதும், மாரடிப்பதுமான இந்தக் காட்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகி, இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து உருமாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த கொண்டாட்டங்களினால் அரசாங்கமும் இந்த நாளை 'முஹர்ரம் பண்டிகை' என்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளதால், இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒரு கொண்டாட்டமோ இது என்றுதான் மற்றவர்களை நினைக்கத் தூண்டும். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து வருவதால் இஸ்லாத்தின் உண்மை நிலை இதுவல்ல என்பதையும் மாற்றுமத மக்களும் உணரத்தான் செய்கிறார்கள். 

 இதுப்போன்ற மூட நம்பிக்கைகளை நம்மிலிருந்து தகர்த்தெறிந்து இஸ்லாத்தின் உண்மையான அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்வோமாக! அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்