ஸபர் மாதம் இஸ்லாமிய மாதங்களில் இர‌ண்டாவது மாதம்

 


இஸ்லாமிய மாதங்களில் இரண்டாவது 'ஸபர்' மாதத்தில் நாம் இப்போது இருக்கின்றோம்,!!


ஒரு ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்களாகும். வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். இது இறைவன் விதித்த நியதி.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடங்கி இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் வரை அனைத்து நபிமார்களின் சமூகத்தாருக்கும் மாதங்களை இவ்வாறு தான் அல்லாஹ் அமைத்தான். வருடத்துக்கு 12 மாதங்கள் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. வானம் பூமி படைக்கப்பட்ட நாள்முதல் இது தான் நடைமுறை என்று அல்லாஹ் சொல்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பன்னிரெண்டுதான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே, இவற்றில் நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன் 9:36)

இஸ்லாமிய மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இஸ்லாமிய மாதங் களில் இரண்டாவது 'ஸபர்' மாதம் ஆகும்.

ஸபர் மாதம் 'ஸபர் முளப்பர்' என்ற அடைமொழி வார்த்தையுடனும் அழைக்கப்படுகிறது. அதன் பொருள்: ஸபர் ஒரு வெற்றி மாதம் என்பதாகும். 'ஸபர்' என்ற அரபி வார்த்தை இரண்டு விதமாக உச்சரிக்கப்படுகிறது.

1. ஸபர் (பிரயாணம்), 2. சொபர் (காலி செய்தல்).

பண்டைய அரபிகள் இந்த மாதத்தில் வீட்டை காலி செய்து, போருக்காகவும், வியாபார நிமித்தமாகவும் பிற இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். எனவே இந்த மாதத்திற்கு பிரயாணம் செய்தல், காலி செய்தல் என்ற இருவேறு பெயர்கள் வரக்காரணமாயிற்று. வரலாற்று நெடுகிலும் ஸபர் மாதத்தில் பிரயாணங்களும், யுத்தங்களும் அதிகம் நடந்திருக்கின்றன.

ஆனால் இன்றைய முஸ்லிம்கள் இந்த மாதம் பீடை மாதமாக கடைப்பிடிக்கிறார்கள், அதைப்பற்றி நாம் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம் இன்ஷா அல்லாஹ்

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.)
இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்)
ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன்
உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208)

இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும்,
அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை
அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அவற்றில் நீரருவிகள்
தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்)
தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 4:13)

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி நடத்த போதுமானவன்…

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்