முஹர்ரம் மாதம் விரைவில் வரும் முஹர்ரம் புனித மாதமா அனாசாரங்களின் மாதமா


Coming_soon 💥 விரைவில்_வரும் முஹர்ரம்_புனித_மாதமா, !? அனாசாரங்களின்_மாதமா, !? 

 இன்று முஸ்லிம்களில் பலர் இந்த மாதத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் போதிக்காத, நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் செய்யாத சடங்குகளை செய்கின்றனர். 

 • “பஞ்சா” என்று கை வடிவத்தில் அலங்கரித்து வைப்பது, 

 • அதைப் புனிதமாக கருதுவது, அதற்கு வழிபாடுகள் செய்வது, 

 • உடலைக் கிழித்துக் கொள்வது, மாரடிப்பது, 

 • யா அலி! யா ஹுஸைன்! என்று கத்துவது,

 • பஞ்சா உடன் ஜோடிக்கப்பட்ட வீடு போன்றவற்றை வீதிகளில் இழுத்துக் கொணடு உலா வருவது, 

 • இந்த பத்து நாட்களில் கணவன் மனைவி பிரிந்து இருப்பது, 

 • பத்தாவது நாளன்று தீ மிதிப்பது, உடலை அலங்கோலப்படுத்துவது, 

 • விசேஷமாக உணவு சமைத்து பரிமாறுவது… 

 இந்த பத்தாவது நாளை துக்க நாளாக அணுஷ்டிக்கின்றனர். ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக அந்நாளில் பல நூதன சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கின்றனர். இப்படி செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், இந்த செயல்கள் மாற்று மத சடங்குகளுக்கு ஒப்பானவை என்பதால் பெரும் குற்ற செயல்களாகவே மார்க்கத்தில் கருதப்படும். “துக்கநாள்” கடைப்பிடிப்பதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அறவே அனுமதியில்லை. பிறந்தநாள், இறந்தநாள் கடைப்பிடிப்பது பிற மத மக்களின் கலாசாரமாகும். முஸ்லிம்கள் கண்டிப்பாக இவற்றைச் செய்யக்கூடாது. 

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் பிற மத மக்களைப் போன்று செயல்படுகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே” (அபூ தாவூது:3512) 

 “இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை கடைபிடிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் கணவன் இறந்துவிட்டால் மனைவி மட்டும் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் அணுசரிப்பாள்.” (புகாரி: 313) 

 “(சோதனைகளின் போதும் துக்கத்தின்போதும்) கண்ணத்தில் அறைந்து கொள்பவனும் சட்டைகளை கிழித்துக் கொள்பவனும் மூடத்தனமான வார்த்தைகளை பேசுபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:1294)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நமது மார்க்கத்தில் புதிதாக சடங்குகளை உருவாக்குவாரோ அந்த சடங்குகள் மறுக்கப்படவேண்டியவையே. (புகாரி:2499)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேச்சில் சிறந்தது அல்லாஹ்வுடைய வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நேர்வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டவை புதிதாக தோற்றுவிக்கப்பட்டவையாகும். நூதன சடங்குகள் அனைத்தும் வழிகேடுகளே. (முஸ்லிம்:1435) 

 மேலும் கூறினார்கள்: புதிதாக தோற்றுவிக்கப்பட்ட எல்லா சடங்குகளை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். புதிய காரியங்கள் அனைத்தும் சடங்குகளே. சடங்குகள் அனைத்தும் வழிகேடுதான். (அபூ தாவூது:4607) 

 மேலும் கூறினார்கள்: புதிய காரியங்கள் அனைத்தும் சடங்குகளே. சடங்குகள் அனைத்தும் வழிகேடுதான். வழிகேடு அனைத்தும் நரகில்தான் கொண்டுபோய் சேர்க்கும். (நசாயீ:1578) 

 இவையும் இன்னும் இவைப் போன்ற செயல்கள் முற்றிலும் இஸ்லாமில் வெறுக்கப்பட்ட செயல்களாகும்; இணைவைப்பில் கொண்டுபோய் சேர்த்து விடக்கூடிய பெரும் பாவங்களாகும். எனவே, முஸ்லிம்கள் இவற்றைவிட்டு விலகுவார்களாக! அல்லாஹ்வின் உண்மை மார்க்கத்தின் பக்கம் திரும்புவார்களாக!

 முஹர்ரம் மாதத்திலும் ஏனைய புனித மாதங்களிலும் ஃபர்ளான தொழுகைகளையும் உபரியான தொழுகைகளையும் பேணி மற்ற வணக்க வழிபாடுகளையும் முறையாகச் செய்து அல்லாஹ்வுடைய அருளையும் மன்னிப்பையும் பெற முயற்சிப்பார்களாக!


 ஷைத்தானுடைய அடிச்சுவடுகளையும் மாற்றுமத கலாச்சாரங்களையும் பின்பற்றுவதை முற்றிலும் தவிர்ப்பார்களாக. அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி நடத்த போதுமானவன்…

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்