Posts

Showing posts from August, 2023

இறுதி நபி (ஸல்) உயர்தோனை நோக்கி புறப்படுதல்,

Image
இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "உயர்ந்தோனை" நோக்கி புறப்படுதல், 😪😥😢😭 இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன,! புறப்படுவதற்கான அறிகுறிகள்,! அழைப்புப் பணி நிறைவுற்று, இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி (ஸல்) அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன. ஹிஜ்ரி 10, ரமழான் மாதத்தில் நபி (ஸல்) இருபது நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். பொதுவாக 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பதுதான் நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இம்முறை வானவர் ஜிப்ரயீல் நபியவர்களிடம் வந்து இருமுறை குர்ஆனைப் பரிமாறிக் கொண்டார்கள். இறுதி ஹஜ்ஜில் ‘இந்த ஆண்டிற்குப் பின் இந்த இடத்தில் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம்’ என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள். ஜம்ரத்துல் அகபாவில் நபி (ஸல்) நிற்கும் போது “உங்களது வணக்க வழிபாடுகளை, ஹஜ் கடமைகளை என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆண்டிற்குப் பிறகு நான் ஹஜ்ஜுக்கு வர முடியாமல் போகலாம்” என்றும் கூறியிர

மிலாதுந்நபியும் முஸ்லீம்களும் இஸ்லாம் சொல்வது என்னா?

Image
மீலாதுந்நபியும்... முஸ்லீம்களும்... இஸ்லாம் சொல்வது என்னா,? ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா, இன்று பெரும்பாலான முஸ்லிம்களிடம் பரவி விட்ட பித்அத்களில் ஒன்று தான் நபியவர்களுக்கு பிறந்த நாள்  கொண்டாடப்படுகிறது இப்படி கொண்டாடுவது முஸ்லிம்களிடம் நன்மையாக கருதப்படுகிறது இது கூடாது என்பதற்காக விரிவான விளக்கத்தை பார்ப்போம். 1445 ஆண்டுகளுக்கு  முன் வாழ்ந்துமறைந்த நபிகள்நாயகம் அவர்கள், இந்த உலகத்திற்கு பல நல்லுபதேசங்களை சொல்லிச்சென்றுள்ளார்கள். “ஏழைக்கு உணவளி, தாய் தந்தையை பராமரித்துவா, உறவினர்களை ஒன்றிணைத்து வாழ், அண்டை வீட்டாருக்கு இடையூறு தராதே, சக மனிதனை மதிக்கக் கற்றுக்கொள், விதவைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவு, பிரச்னைகள் எங்கேனும் நடந்தால் அதனைத் தீா்த்துவை, நன்மைகளை ஏவு, தீமைகளைத் தடு, அனைவருடனும் சகோதரத்துவத்தோடு பழகு, பெரியவர்களுக்கு மரியாதைகொடு, சிறியவர்களின் மீத

ஸபர் மாதம் பிறை 27 இரவில் நபி (ஸல்) ஹிஜ்ரத் பயணம் மக்காவில் இருந்து குபா வழியினிலே

Image
  இஸ்லாமிய வரலாற்றுத் தடயம் நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 27 இரவில், ஹிஜ்ரத் பயணம்,  மக்காவில் இருந்து  குபா வரைக்கம்,! வீட்டிலிருந்து குகை வரை,! நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் பிறை 27 இரவில், அதாவது கி.பி. 622 செப்டம்பர் 12 அல்லது 13ல் நபி (ஸல்) தனது வீட்டை விட்டு வெளியேறி உயிராலும், பொருளாலும் தனக்கு மிகுந்த உதவி ஒத்தாசை செய்து வந்த, தனது தோழரான அபூபக்ர் (ரழி) வீட்டிற்கு வந்தார்கள். பின்பு, இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டனர். விடியற்காலை உதயமாவதற்குள் மக்காவை விட்டு வெளியேறிவிடத் துரிதமாகப் பயணித்தனர். குறைஷிகள் தங்களை மிக மும்முரமாகத் தேட முயற்சிப்பார்கள் பொதுவாக மக்காவிலிருந்து வடக்கு நோக்கிய மதீனாவின் பாதையைத்தான் கண்காணிப்பார்கள் என்பதால் முற்றிலும் அந்த பாதைக்கு எதிர் திசையிலுள்ள மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிய தெற்கு திசையின் பாதையில் சென்றார்கள். இவ்வாறு ஐந்து மைல் நடந்ததற்குப் பின் அங்குள்ள ‘ஸவ்ர்’ மலையை சென்றடைந்தார்கள். இது ஏறுவதற்குக் கடினமான, பெரிய பாறைகளைக் கொண்ட உயரமான மலையாகும். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாதங்கள் காயமடைந்தன. (எத

ஹதீஸ் கிரந்தங்கள்

Image
ஹதீஸ் கிரந்தங்கள், தமிழுக்கம் மற்றும் குர்ஆன், தமிழுக்கம், புகாரி,   முஸ்லீம்,  திர்மிதி,     நஸாயீ,  அபூதாவூத், இப்னுமாஜா, ஆகிய ஹதீஸ் கிரதங்கள் ஒரே ஆப்பிள் கிடைக்கிறது பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் ஆனால்  இதன் உள்ளே சென்று படிக்க சந்தா செலுத்த வேண்டும் மாத சந்தா, வருட சந்தா, செலுத்தினால் மட்டுமே படிக்க முடியும் எவ்வளவு என்ற விவரம் கீழே பதிவிறக்கம் செய்ய லிங்க் இதோ 👇 https://play.google.com/store/apps/details?id=com.hadhees.android   அபூதாவூத் ஹதீஸ் தமிழாக்கம், Abu dawood - Arabic and Tamil https://play.google.com/store/apps/details?id=com.kk.abudawood அல்குர்ஆன் தமிழுக்கம், Tamil Quran - தமிழ் குர்ஆன் https://play.google.com/store/apps/details?id=kk.qurantest இணையதளம் வழியாக பார்வையிட  ஸஹீஹ் புகாரி https://www.rahmathpublications.com/bukhariindex.php இணையதளம் வழியாக பார்வையிட ஸஹீஹ் முஸ்லீம் https://www.rahmathpublications.com/muslimindex.php

இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது

Image
 இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது? தயவுசெய்து சிறிது நேரம் செலவிடுங்கள் ஆச்சரியமான கட்டுரை! இஸ்லாம் பயங்கரவாதம் என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்! -ரஞ்சித் லால் மாதவன்.. இந்த சகோதரர் , மலையாளத்தில் மிக அருமையான ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதை வாசித்து கேட்டு அறிந்த உடன், தமிழில் இதை மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதை நான் மொழிமாற்றம் செய்து இருக்கிறேன்  ஒவ்வொருவரும் அறிய வேண்டிய செய்தி. உலகில் ஆண்டுக்கு 321 பில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது. உலகில் மது விற்பனை ஆண்டுக்கு 1600 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது. இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத வர்த்தகம் நடைபெறுகிறது விபச்சார வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புடையது. சூதாட்ட வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 110 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது. தங்க வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள். கம்ப்யூட்டர் கேம் வணிகமானது உலகில் ஆண்டுக்கு $54 பில்லியன் ஆகும். ஒவ்வொரு ஆண்ட

புகை பிடித்தால் ஒரு பாதகச் செயல்

Image
புகை  புகை பிடித்தால் ஒரு பாதகச் செயல் நமது மார்க்கம் அனுமதிக்காத காரியங்களில் ஒன்று புகை பிடிக்கும் பழக்கமாகும். உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்  (அல்குர்ஆன் 4:29) உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!   (அல்குர்ஆன் 2:195) உங்களையே நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள் என்று இந்த வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆனால் புகை பிடிப்பவர் தானும் கெட்டு, தன் உடல் நலத்தையும் கெடுப்பதோடு மட்டுமன்றி தனது சுற்றுப்புறச் சூழல், குடும்பத்தினர், அண்டை அயலாரின் நலனையும் கெடுத்து விடுகின்றனர். புகையிலையிலிருந்து 300க்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் (பர்ஷ்ண்ய்ள்) வெளியாகின்றன. அவற்றில் அதிகம் கேடு விளைவிப்பவை, 1. நிகோடின், 2. கார்பன் டை ஆக்ஸைடு, 3. கார்பன் மோனாக்ஸைடு, 4. கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவையாகும். இவை அனைத்தும் கரியமில வாயுடன் தொடர்புடையவை. புகை பிடிப்பதால் உதடுகள், நாக்கு, வாயின் உட்பகுதி, கன்னம், மூக்கின் இரு பகுதியில் உள்ள சைனஸ் (நண்ய்ன்ள்), தொண்டை, பேரிங்ஸ், லாரிங்ஸ் , உணவுக்குழாய், காற்றுக் குழாய், நுரையீரலுக்குள் செ

நபியவர்களின் குடும்பம்

Image
நபியவர்களின் குடும்பம் 🛖🛖 1)  ஹிஜ்ரத்துக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் வீடு மக்காவில் இருந்தது. அதில் நபி (ஸல்), அவர்களின் மனைவி கதீஜா பின்த் குவைலிது (ரழி)  இருந்தார்கள். நபி (ஸல்) தங்களது 25வது வயதில் 40 வயது நிரம்பிய கதீஜா (ரழி) அவர்களை மணமுடித்தார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை நபி (ஸல்) வேறு யாரையும் மணமுடிக்கவில்லை. கதீஜா (ரழி) அவர்களின் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பல ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். ஆண் குழந்தைகள் யாரும் உயிருடன் இல்லை. பெண் பிள்ளைகள் ஜைனப், ருகய்யா, உம்மு குல்சூம், ஃபாத்திமா (ரழி) ஆகியோராகும். ஹிஜ்ரத்துக்கு முன்பாக அபுல் ஆஸ் இப்னு ரபீஆவுக்கு ஜைனபை நபி (ஸல்) மணமுடித்து வைத்தார்கள். இவர் ஜைனபுடைய சிறிய தாயாரின் மகனாவார். ருகையா, உம்மு குல்சூம் ஆகிய இருவரையும் ஒருவர் பின் ஒருவராக உஸ்மானுக்கு மணமுடித்து வைத்தார்கள். பத்ரு, உஹுதுப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஃபாத்திமாவை அலீக்கு மணமுடித்துத் தந்தார்கள். ஃபாத்திமாவுக்கு ஹசன், ஹுசைன், ஜைனப், உம்மு குல்சூம் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தனர். மற்ற முஃமின்களை விட நபி (ஸல்) அவர்களுக்குப் பல காரணங்கள

08 - வது மாதம் ஷஃபான் நில் நடைபெற்ற போர்களைப் பற்றி

Image
  இஸ்லாமிய எட்டாவது மாதம் ஷஃபான் மாதத்தில் நடைபெற்ற இஸ்லாமிய போர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு, இரண்டாம் பத்ர் போர்  (ஹிஜ் 4, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி) இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூ ஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கி விட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு 1500 தோழர்கள் மற்றும் 10 குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ (ரழி) அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள். அபூஸுஃப்யான் 2000 மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் 50 குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற பகுதியிலுள்ள ‘மஜன்னா’ என்ற கிணற்றருகில