இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது


 இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது? தயவுசெய்து சிறிது நேரம் செலவிடுங்கள் ஆச்சரியமான கட்டுரை!

இஸ்லாம் பயங்கரவாதம் என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்! -ரஞ்சித் லால் மாதவன்..

இந்த சகோதரர் , மலையாளத்தில் மிக அருமையான ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதை வாசித்து கேட்டு அறிந்த உடன், தமிழில் இதை மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

அதை நான் மொழிமாற்றம் செய்து இருக்கிறேன்  ஒவ்வொருவரும் அறிய வேண்டிய செய்தி.

உலகில் ஆண்டுக்கு 321 பில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது.

உலகில் மது விற்பனை ஆண்டுக்கு 1600 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது.

இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத வர்த்தகம் நடைபெறுகிறது

விபச்சார வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புடையது.

சூதாட்ட வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 110 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது.

தங்க வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள்.

கம்ப்யூட்டர் கேம் வணிகமானது உலகில் ஆண்டுக்கு $54 பில்லியன் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 2380 பில்லியன் டாலர் வணிகத்திற்கு எதிராக இஸ்லாம் நிற்கிறது!

(மது, போதை, விபச்சாரம், சூதாட்டம் இவை அனைத்தும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை, தடை (ஹராம்) செய்யப்பட்டுள்ள செயல்களாகும்).

1 பில்லியன் டாலர் என்றால் 7000 கோடி ரூபாய்..

2380 பில்லியன் டாலர்கள் என்றால் = 1,66,60,000 கோடி ரூபாய் (ஒரு கோடியே 66 லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய்).

2017ல் அருண் ஜேட்லி வெறும் 336 பில்லியன் டாலர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட ஒவ்வொரு தொழில்களும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் நடத்தப் படுகிறது.

மது, சாராயம், போதைப்பொருள் வியாபாரம் கூடாது என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால் ஏற்படும் விளைவு நஷ்டம் 2000 பில்லியன் டாலர் போதைப்பொருள் மாஃபியாவின் வியாபாரம்!

பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் பெட்ரோலுக்காக பிற நாடுகள் மீது படை எடுத்து அப்பாவி மக்களைக் கொல்லாமல், ரத்தம் சிந்தாமல் இருந்தால், 100 பில்லியன் டாலர் ஆயுத மாஃபியாவின் வியாபாரம் முடிவுக்கு வந்துவிடும் இஸ்லாமிய சட்டம் ஒழித்துவிடும்!

விபச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற இஸ்லாமிய கொள்கை அமலுக்கு வந்தால் விபச்சார மாஃபியாவின் 400 பில்லியன் டாலர் வியாபாரம் முடிவுக்கு வரும்!

ஆபாச வீடியோக்கள் பார்ன் வெப்சைட்டுகள் பாதிக்கப்படும்.

சூதாடக்கூடாது என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால், சூதாட்ட மாஃபியாவின் 110 பில்லியன் டாலர் வியாபாரம் முடிவுக்கு வரும்!

ஒரு பெண்ணின் நிர்வாணம் மட்டுமே அவளது தனியுரிமை, அது கண்காட்சி அல்ல என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால், 100 பில்லியன் டாலர் ஆபாச மாஃபியாவின் வியாபாரம் முடிவுக்கு வரும்!

இந்த 2300 பில்லியன் டாலர் வர்த்தகத்தின் மீது போர் தொடுத்தது இஸ்லாம்தான்..அந்த இஸ்லாத்தை எதிர்க்காமல் வரவேற்கவா செய்வார்கள்?

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க உலக ஊடகங்களை இந்த மாஃபியாக்கள் விலைக்கு வாங்கி, இந்த மாஃபியாக்கள் வீசிய எலும்புத் துண்டுகளை தின்று ஊடக மாஃபியா வளர்ந்து செழித்திருக்கிறது.

இஸ்லாம் தீவிரவாதம் என்று பாடி நாடு முழுவதும் ஊர்வலம் சென்றனர். இந்தப் பணத்தைக் கொண்டு தீவிரவாதத்தை வளர்த்தார்கள்.

இந்த மாஃபியாக்கள் உருவாக்கும் பயங்கரவாதம் இஸ்லாமிய பயங்கரவாதம் எனப்படுகிறது!

இஸ்லாம் தீவிரவாதம் என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

அதற்காக இந்த பில்லியன் டாலர்களைக் கொண்டு அவர்களே சில முஸ்லிம்களை விலைக்கு வாங்கினார்கள்.

ஒருவரைக் கொல்வது எல்லா மக்களையும் கொல்வதற்கு சமம் என்று சொன்ன இஸ்லாம், தீவிரவாதத்தின் மதமாக மாறியது!

உங்கள் கண்களும் இதயங்களும் மதவெறியால் குருடாக்கப்படவில்லை என்றால், உங்கள் கண்களைத் திறந்து, உங்கள் இதயத்தைத் திறந்து கேளுங்கள்..

உங்கள் இறைவனின் வார்த்தைகளிலிருந்து எவ்வளவு திறமையாக அவர்கள் உங்களை விலக்கி கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை "இஸ்லாம் பயங்கரவாதம்" என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்!

"உண்மையில், மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்" திருக்குர்ஆன்!

கட்டுரை எழுதியவர்: -ரஞ்சித் லால் மாதவன். (மலையாளத்தில்)

நன்றி 

தமிழாக்கம்: Shajahan Sahib. - via Abulhasan Ansaam

நன்றி 


Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது