Posts

Showing posts from February, 2024

ரமளானை வரவேற்போம்

Image
  ரமளானை வரவேற்போம்  மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.....   'இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும'. (அல்குர்ஆன் 2:185)   மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37)   ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.   இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க திருக்

ஷபே பராஅத் குறித்த தவறான கருத்துகள் மற்றும் அதற்கான விடைகள்

Image
  ஷபே பராஅத் குறித்த தவறான கருத்துகள் மற்றும் அதற்கான விடைகள் ❌ தவறான கருத்து 1: இந்த இரவில், நம் பாவங்களை மன்னிப்பதற்காக அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவான். ✔ விடை: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்“ என்று கூறுவான்“ . (புகாரி 1145, முஸ்லிம் 1386)_ ❌ தவறான கருத்து 2: இந்த இரவில் தான் நம்முடைய விதி, வாழ்நாள் மற்றும் ஜீவனம் ஆகியவை விதிக்கப்படுக்கின்றன. ✔விடை : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத்துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, ”இறைவா! இவன் நற்பேறற்றவனா?அல்லது நற்பேறு பெற்றவனா?” என்று கேட்கிறார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அதைக் குறித்து எழுதப்படுகிறது. பிறகு ”இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா?” என்று கேட்டு அதற்கே

பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்

Image
  பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும் (1) பராஅத் இரவுக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களின் நிலை:  இவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம்: ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில், 'ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. அவர்களைத்தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பகீஃ என்னும் அடக்கஸ்தலத்தில் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் சொன்னார்கள், ஆயிஷாவே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு துரோகம் இழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா? அதற்கு நான் அவ்வாறில்லை நீங்கள் மனைவியர் ஒருவரிடத்தில் வந்திருப்பீர்கள் என்று எண்ணினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவில் இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கையை விட உங்களில் அதிகமானவர்களின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதி 670) இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல. திர்மிதியில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் 'இந்த ஹதீஸ்

ரமளானில் வெற்றிபெற ஷஃபான் ஒரு பயிற்சின் மாதம்

Image
  ரமளானில் வெற்றிபெற ஷஃபான் ஒரு பயிற்சின் மாதம்.! இஸ்லாமிய 9 - வது மாதமான ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு இஸ்லாமிய 8 - வது மாதமான ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது. ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். அந்தவகையில் ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் இம்மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் இப்பொழுது நாம் இருக்கின்றோம். இம்மாதத்தில் நல்ல அமல்களை செய்து பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது.  “நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ‘பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்” என்று ஆயிஷா (ரலி) கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார்.(அபூதாவூத், நஸயி) ஆகவே இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்ற

ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவம் என்ன

Image
ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவம் என்ன இன்றைய நவீன உலகத்தில் மனிதன் எதை செய்தாலும் குறுக்கு வழியில் மிக எளிதில் செய்திட நினைக்கின்றான் அதே வழியில் சொர்க்கத்தை அடைவதற்காகவும் அமல்கள் குறுக்கு வழியில் செய்து அடைந்து விடலாம் என்று எண்ணி தொழுகை நோன்பு ஜக்காத் ஹஜ் இவைகளை தவிர்த்து இந்த ஷஃபான் மாதத்தில் சில குறுக்கு அமல்களை செய்து சுவனம் சென்று விடலாம் என்று நினைக்கின்றான்.?   அமல்கள் உயர்த்தப்படும் மாதம்: இஸ்லாமிய வருட கலண்டரில் ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அற்கு அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது. ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். அந்தவகையில் ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் இம்மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொhள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது