ரமளானில் வெற்றிபெற ஷஃபான் ஒரு பயிற்சின் மாதம்

 


ரமளானில் வெற்றிபெற ஷஃபான் ஒரு பயிற்சின் மாதம்.!

இஸ்லாமிய 9 - வது மாதமான ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு இஸ்லாமிய 8 - வது மாதமான ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது. ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். அந்தவகையில் ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் இம்மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் இப்பொழுது நாம் இருக்கின்றோம். இம்மாதத்தில் நல்ல அமல்களை செய்து பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது. 

“நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ‘பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்” என்று ஆயிஷா (ரலி) கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார்.(அபூதாவூத், நஸயி)

ஆகவே இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் என்பதை மேலே உள்ள ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

இதற்கு மாற்றமாக இன்றைய மக்கள் மனதில் ஷஃபான் மாதம் வந்தாலே அவர்களுக்கு ரமலான் நினைவில் வருவதில்லை வழிகேடர்கள் உருவாக்கிய அந்த பராத் இரவு தான் நினைவில் வருகிறது இந்த பித்ததான இரவில் எப்படி இஸ்லாம் காட்டி தராத தாஸ் வி சிறப்புத் தொழுகை தொழுவது சிறப்பு மும்மூன்று முறை யாசின் ஓதுவது பள்ளிவாசலை அலங்கரிப்பது என்ற விஷயத்திலேயே கடந்து விடுகிறார்கள் இந்த பராத் இரவு இஸ்லாம் காட்டிய வழி அல்ல நமது உயிரினும் மேலான முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழியும் அல்ல.

ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில், 

மூன்று யாசீன்கள் ஓதுவதும்,

அன்று இரவில் நின்று வணங்குவதும்.,

அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவ்விரு நபிமொழிகளிலிருந்தும் பித்அத்தான செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பது நமக்கு தெளிவாக விளங்குகின்றது.

இந்த பித்ததான வழியை விட்டு விலகி அடுத்து வரும் ரமலானை எப்படி சிறப்பிக்கலாம் என்ற நினைவில் இந்த ஷஃபான் மாதத்தில் அதிக அதிக அமல்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்


Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது