Posts

Showing posts from December, 2023

உம்ரா கையேடு ( வழி காட்டி ) செயல்முறை

Image
  உம்ரா கையேடு ( வழி காட்டி ) செயல்முறை  அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்!  (அல் குர்ஆன் 2:196) அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.  அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன் . (அல்குர்ஆன் 3:97,96) ஹஜ், உமீராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும். எனவே ஹஜ், உமீராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம் அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக! உம்ரா ச

ஜனவரி மாதம் சொல்ல வரும் பாடம்

Image
  ஜனவரி மாதம் சொல்ல வரும் பாடம் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. தூதர்களில் இறுதியானவராகிய மனித குல வழிகாட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடக்கும் நல் உள்ளங்கள், உலக சமாதான விரும்பிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக! இரவும் பகலும் மாறிவருவதால் நாட்கள் பிறக்கின்றன என மனிதன் அறிந்து வைத்துள்ளான். கால ஓட்டம் என்பது வானங்கள், பூமி ஆகிய இருபெரும் கோழங்களும் ஏனெய படைப்புகளும் இறைவனால் படைக்கப்படுவதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே உலக நகர்வுகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி பூரணமாக அறிந்தவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைவாக “கலம்” என்ற எழுதுகோல் மூலம் பதிவேடொன்றில் தீர்மானிக்கப்பட்ட முழுமையான ஆயுள்காலத்தில் இருந்து தரப்படும் சில நொடிகளாகும். மனிதன் தாயின் கருவறையில் உருவாகும் நான்கு மாத கால இடைவெளிக்குள் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வரும் வானவர் ஒருவர் மூலம் அவனுக்கான கால அளவு பதியப்படுவதும் ஆரம்பமாக பதியப்பட்ட எழுத்தின் இருந்து தரப்படுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அல்லாஹ்தான் இவரையும் பகலைய

இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்

Image
  இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு  கொண்டாட்டம்! அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இன்னும் சில தினங்களில் 2023 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டை நாம் எதிர்கொள்ள இருக்கின்றோம். புது வருடப்பிறப்பு எனக் கூறி இதைக் கொண்டாடி மகிழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட இக்கலாச்சாரம் வேரூண்றியுள்ளது. நம் தமிழகத்திலும் இதன் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பலர் இது பற்றிய மார்க்கத் தெளிவில்லாமல் அவர்களும் இந்த அந்நிய கலாச்சாரத்தை கொண்டாடி வருகின்றனர். அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் அவன் விரும்பும் காரியங்களை செய்ய வேண்டும். அவன் வெறுக்கின்ற காரியங்களை விட்டு விலக வேண்டும். இந்த ஈமானியச் சிந்தனையை நினைவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். புத்தாண்டுக் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளதா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்கமாக கருதுகிறார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரமே உலகம் முழுவதும்

எல்லோரும் கொண்டாடுவோம்

Image
  எல்லோரும் கொண்டாடுவோம்…! புத்தாண்டைக் கொண்டாட தயாராக இருப்பீர்கள்.ஆண்டு முழுவதும் மாடாய் உழைத்துவிட்டு நல்ல/கெட்டபடியாகக் கழிந்த 2023 ஐ வழியனுப்பும் விதமாக நள்ளிரவு 11:59 ஐ ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறீர்கள். இதோ இன்னும் சில நாட்கள் கைது நம்முடன் இருந்த 365 முழு நாட்களுக்கு விடைகொடுத்து அடுத்த _?_ ஆண்டின் முதல் நாட்களை எதிர் நோக்கி இருக்கிறோம். 2024 ஆம் ஆண்டின் பரவசத்துடன் திக்… திக்..இதயத்துடன் நிசப்தமான நிமிடங்களுக்காக காத்திருப்பவர்களின் சிந்தனைக்கு! இந்த வருடம் பதில் சொல்லா விட்டாலும் பரவாயில்லை. 2024 டிசம்பர் 31 க்குள் சொன்னால் போதும். 1) தமிழ்பண்பாடு, இந்தியக் கலாச்சாரம் என்று வருடம் முழுதும் வாய்கிழிய பேசும் அரசியல்வாதிகளே!புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது இந்திய/தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமல்ல என்பது தெரிந்திருந்தும், ஏன் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று வாய்ஜாலம் காட்டுகிறீர்கள்? 2) “மது – நாட்டுக்கு,வீட்டுக்கு,உடலுக்குத் தீங்கு” என்று என்று விளம்பரம் செய்யும் அரசாங்கமே! புத்தாண்டிலிருந்து மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்று சட்டம் இயற்றத் தயங்குவது ஏன்? 3) ஆ

கிறிஸ்துமஸ் பண்டிகையும் முஸ்லீம்களும் வாழ்த்துகளும்

Image
  கிறிஸ்துமஸ் பண்டிகையும், முஸ்லீம்களும், வாழ்த்துகளும், முஸ்லீம்களாகிய நாம் எல்லா நிலைகளிலும் எல்லா நிலைகளிலும் இஸ்லாத்தின் நிழலில் கீழ் நின்று தான் எந்த ஒரு விடயத்தையும் அணுகவேண்டும் என்கின்ற கட்டாய நிலை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மறுமையை மையமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச்செல்பவர்கள். எனவே உலகில் கிடைக்கும் சந்தோஷத்துக்காக மறுமையை.! இழந்து விடக்கூடாது.  ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகளை், கொண்டாட்டங்கள் குட்டிப்போட்ட பூனையைப் போல் வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பற்றி கிறிஷ்தவர்களின் வேதநூலான பைபிள் என்ன சொல்கின்றது என்பதனை சற்று ஆராய்ந்து பார்போம்,  பைபிளின் பழைய ஏற்பாட்டில்: - 'புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாகயிருக்கிறது. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்க