கிறிஸ்துமஸ் பண்டிகையும் முஸ்லீம்களும் வாழ்த்துகளும்

 

கிறிஸ்துமஸ் பண்டிகையும், முஸ்லீம்களும், வாழ்த்துகளும்,

முஸ்லீம்களாகிய நாம் எல்லா நிலைகளிலும் எல்லா நிலைகளிலும் இஸ்லாத்தின் நிழலில் கீழ் நின்று தான் எந்த ஒரு விடயத்தையும் அணுகவேண்டும் என்கின்ற கட்டாய நிலை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மறுமையை மையமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச்செல்பவர்கள். எனவே உலகில் கிடைக்கும் சந்தோஷத்துக்காக மறுமையை.! இழந்து விடக்கூடாது. 

ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகளை், கொண்டாட்டங்கள் குட்டிப்போட்ட பூனையைப் போல் வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

முதலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பற்றி கிறிஷ்தவர்களின் வேதநூலான பைபிள் என்ன சொல்கின்றது என்பதனை சற்று ஆராய்ந்து பார்போம், 

பைபிளின் பழைய ஏற்பாட்டில்: -

'புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாகயிருக்கிறது. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது. அவைகள் பேச மாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும், அவைகளுக்குப் பயப்படவேண்டாம். அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்' (எரேமியா 10:2-4)

பைபிளின் இக்கூற்றிலிருந்து நாம் விளங்கக்கூடியது என்னவென்றால்: -

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், கிறிஸ்துமஸ் மரம் நாட்டுவதும், அதை அலங்கரித்து வணங்குவதும் கிறிஸ்துவர்களின் மார்க்கத்தில் உள்ளவையன்று. கர்த்தர் விரும்பாத ஒன்று என்பதையும் நாம் அவர்களது பைபிளிலிருந்தே விளங்க முடிகின்றது. பைபிளின் போதனைக்கே கிறிஸ்தவர்கள் முரண்படுவது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவே முஸ்லிம்களாகிய நாம் அடிப்படையே இல்லாத ஒன்றின் பக்கம் தலைசாய்ப்பது தவறானதாகும். இஸ்லாத்தைப் பொருத்தவரை கிறிஸ்துமஸ் கொண்டாடுவதோ அல்லது அப்பண்டிகையில் கலந்து கொள்வதோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். 'புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்' என்று பைபிளும் கூறுகிறது. அதைத்தான் இஸ்லாமும் ஆணித்தரமாகக் கூறுகிறது. நமது மார்க்கமான இஸ்லாத்தில் நாம் உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் புதியனவைகள் கலந்துவிடாமலும் கவணமாகவிருக்க வேண்டும். 

ஏனென்றால் அல்-குர்ஆனும் அல் ஹதீஸும் எவைகளை நமக்குப் போதிக்கின்றதோ அவைகள் மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய கிரியைகளாகும். அதுமட்டுமல்லாமல் 'எவர் அந்நிய சமூகத்தைப் பின்பற்றுகிறாரோ அவரும் அந்நிய சமூகத்தவராவார்' என்கின்ற ஹதீஸ் இங்கு நினைவு படுத்தப்பட வேண்டியதாகும். அத்தோடு நாம் எப்போதுமே எமது அகீதாவைப் பாதிக்கக் கூடிய விடயங்களில் மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும். எவைகள் மீது இஸ்லாத்தின் தூண்கள் நிலை பெற்றுள்ளதோ அவைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும். ஏனென்றால் இஸ்லாம் மார்க்கமானது எப்போதுமே தீமைகளின் பக்கம் தலைசாய்ப்பதை விரும்பவில்லை.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மது, புகைத்தல், இசை, வீணான கேளிக்கைகள் போன்ற எத்தனையோ தீமைகள் அங்கே தலை விரித்தாடுவதை நாம் பார்க்க முடியும். அங்கு பங்கேற்கின்ற போது ஏதாவதொரு தீமையில் நாம் விழவேண்டிய சூழ்நிலை உருவாகும். நமது நன்பருக்காக என்று ஏதோ ஒன்றை நாம் செய்யப் போய் நாமேன் தீமைகளில் விழவேண்டும்?

எனவே தீமைகளை விட்டு ஒதுங்குவோம், தீமைகளுக்கு விலை போகாமல் நம் உள்ளங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்.

கிறிஸ்மஸ் வாழ்த்து கூறலாமா?

"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!அல்லாஹ் தேவைகளற்றவன்.    (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.      அவனுக்கு நிகராக யாருமில்லை. திருக்குர்ஆன்  112:(1-4)

இந்த குர்ஆன் வசனத்தின் மூலம் முஸ்லிம்களாகிய அறிய வேண்டியது

 கிறிஸ்மஸ் என்பது இயேசு என்று சொல்லக்கூடியவர் (ஈஷா நபி ) (அவர் மீது அல்லாஹ்வின்  சாந்தி உண்டாகட்டும்) பிறந்தநாளைத்தான் கொண்டாடுகிறார்கள். அதுவும் அல்லாஹ்வின் மகன் என்று இப்பொழுது நீங்கள் வாழ்த்து சொன்னால் இயேசுஅல்லாஹ்வின் மகன் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக அர்த்தம். அப்போ மேலே உள்ள வசனத்திற்கு முரண்படுகிறது இந்த வசனம் புறக்கணிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும். அப்போது நீங்கள் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேறி விடுகிறீர்கள்,

கிறிஸ்மஸ் வாழ்த்தைப் பொருத்தவரை, அது குர்ஆனின் போதனைக்கு நேரடியாக முரண்படும் ஈஸா (அலை) அவர்களுக்குத் தெய்வீகத் தன்மையை வழங்கும் மாபெரும் கொள்கைப் பிறழ்வை அடிப்படையாகக் கொண்டதாகும். தனது அற்ப உலக வாழ்வுக்காக குர்ஆனைப் புறக்கணிப்பதற்கு நாமொன்றும் இளித்தவாயர்கள் கிடையாது. அல்லாஹ்வுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியதே கிறிஸ்தவர்களின் ஈஸா (அலை) அவர்கள் பற்றிய கொள்கையாகும். அல்லாஹ் வெறுக்கும் ஒன்றுக்கு வாழ்த்துச் சொல்பவனை விட இளித்தவாயர்கள் வேறு யாராக இருக்க முடியும்? ஆனால் தோல்வி மனப்பான்மையும் முஸ்லிம் என்ற கண்ணிய உணர்வும் இல்லாமல் சென்றதன் விபரீத விளைவே இது. இப்னு கல்தூன் குறிப்பிடும் “தோல்வியுற்றவன் வென்றவனையே பின்பற்றுவான்” என்ற சமூகவியல் கோட்பாட்டின் நவீன வடிவமே இதுவாகும்.

தாய் வயிற்றில் உருவாகிப் பிறந்தவர் கடவுளாக இருப்பது கிடக்கட்டும். தூய்மையானவராகக் கூட இருக்க முடியாது என்று பைபிள் கூறுகிறது.

ஸ்திரீயிடத்தில் பிறந்தவன் சுத்தமாய் இருப்பது எப்படி? (யோவான் 25:4)

உஸைர் கர்த்தரின் மகன்’ என்று யூதர்கள் கூறுகின்றனர். ‘கிறிஸ்து கர்த்தரின் மகன்’என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். கர்த்தர் அவர்களை அழிப்பார். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? அவர்கள் கர்த்தரையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மேரியின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:30, 31)

‘கர்த்தர் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டார்’ என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. கர்த்தரின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா? ‘கர்த்தரின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்’ என்று கூறுவீராக!(அல்குர்ஆன் 10:68, 69)

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத கர்த்தருக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!(அல்குர்ஆன் 17:111)

‘அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்’ என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து,பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை.வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள். (அல்குர்ஆன் 19:88, 93)

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! கர்த்தரின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மேரியின் மகன் இயேசு எனும் கிறிஸ்து கர்த்தரின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே கர்த்தரையும், அவரது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. கர்த்தரே ஒரே வணக்கத்திற்குரியவர். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. கர்த்தர் பொறுப்பேற்கப் போதுமானவர். மஸீஹும், நெருக்கமான வானவர்களும் கர்த்தருக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான். நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். கர்த்தரையன்றி தங்களுக்கு உதவுபவனையோ,பொறுப்பாளனையோ அவர்கள் காண மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:171-173)

இயேசு சிறந்த மனிதர் என்பதையும் அதே சமயம் அவர் கடவுள் தன்மை பெற்றவர் அல்லர் என்பதையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

புரிந்து கொள்ள வேண்டிய பகுதி:

பிற மதத்தினருடன் சக வாழ்வைப் பேணுதல், கொடுக்கல் வாங்கல் செய்தல், வியாபாரம் செய்தல், அவர்கள் மார்க்கத்துக்கு முரணற்ற விருந்துகளுக்கு அழைத்தால் அதில் கலந்து கொள்ளுதல்' அவர்களுக்கு ஆபத்தின் போது உதவி செய்தல், போர்களின் போது சமாதானத்தை விரும்புவோருக்க அடைக்களம் கொடுத்தல் போன்றவை தடை கிடையாது இவை இஸ்லாம் பேணச் சொல்லும் உறவு முறைகலாகும். எமது மார்க்கம் எதை வரம்பாகா சொல்லியுள்ளதோ அவற்றைப் பேணி நடப்பது என்மீது கடமையாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் தெளிவைத் தருவானாக...!

கிறித்தவ நண்பர்களே! பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய உங்களுக்கு விருப்பமிருந்தால்….

இயேசுவைச் சிறந்த மனிதராகவும், தேவனின் தீர்க்கதரிசியாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள்! அவரைக் கடவுள் என்றோ, கடவுளின் மகன் என்றோ கூறாதீர்கள்!

இயேசுவின் போதனையைத் தூய வடிவில் கூறி, பதினான்கு நூற்றாண்டுகளாக அதை நிலைநிறுத்தி வரும் தூய இஸ்லாத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! ஜெயம் பெறுங்கள்!

இதனால் இயேசுவை மறந்தவர்களாக, அவரை அலட்சியப்படுத்தியவர்களாக நீங்கள் ஆக மாட்டீர்கள்! மாறாக இஸ்லாத்தில் நீங்கள் இணைவதன் மூலம் இயேசுவை உரிய முறையில் மதிப்பவர்களாகவும், அவரது போதனைகளைத் தூய வடிவில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் ஆவீர்கள். பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய தேவன் அருள் புரியட்டும்! ஆமென்!

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது