உம்ரா கையேடு ( வழி காட்டி ) செயல்முறை

 


உம்ரா கையேடு ( வழி காட்டி ) செயல்முறை 

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்!  (அல் குர்ஆன் 2:196)

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

 அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3:97,96)

ஹஜ், உமீராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும். எனவே ஹஜ், உமீராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம் அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

உம்ரா செய்யும் முறை 

🔹️எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து           கொள்ளவேண்டும்.                            🔹️தவாஃப் செய்ய வேண்டும்.                      🔹️இரண்டு ரக்அத் கன்னத் தொழ           வேண்டும்                                                    🔹️ஸயீ செய்ய வேண்டும்.    🔹️மொட்டையடிக்க வேண்டும்.        

இஹ்ராம் அணியும் முறை


 

இஹ்ராம் அணிவதற்கென எல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன் குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.


விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உருத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.

இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும் முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.

இஹ்ராம் அணிந்துள்ளவர் ஆண்,பெண் செய்யக் கூடாதவைகள்

🚫 திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது. முஸ்லிம் 2522, 2524

🚫 மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது). திருக்குர்ஆன் 2:197

🚫 வேட்டையாடுவது. திருக்குர்ஆன் 5:94,95,96

🚫 உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது. புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851

🚫 நகம் வெட்டுவது. முஸ்லிம் 3653, 3654

🚫 தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது திருக்குர்ஆன் 2:196

🚫 கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.

🚫 ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது

இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை

🚫 தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது. புகாரி 1265, 1266, 1267, 1268, 1839

🚫 தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது. புகாரி 134, 366, 1542, 1842, 5794

பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை

🚫 பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' புகாரி 1838

தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால் அவற்றை இஹ்ராமுக்கு முன்பே முடித்து விட வேண்டும்.

தல்பிய்யா

எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர். லப்பைக்க உம்ரதன் என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.

لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக். புகாரி 1549, 5915

பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும் அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.

தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.

கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...

بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக

பொருள் : அல்லாஹ்வும் சாந்தியும் அவர் மீது உண்டாகட்டும், அல்லாஹ் உங்கள் கருணையின் கதவுகளைத் திறக்கட்டும்.

என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய


ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.

தவாப் செய்யும் முறை

கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.

              بسم الله الله اكبر

பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்‎ என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும். புகாரி 1612, 1613, 1632, 5293 

ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.

முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். புகாரி 1644, 1617

(முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக்கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும். தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை கேட்டு வரலாம். குர்ஆனை ஒதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...

‎‫رَبَّنَا اطِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْاخِرَةِ حَسَنَةً وَقِنَا‬‎ ‎‫عَذَابَ النَّارِ‬‎

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார் அபூதாவூத் 1616

பொருள் "எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும். இவ்வாறாக ஏறு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால் எந்தக் குறையும் ஏற்படாது.

واتخدو من مقام إبراهيم مصلى

வத்தஃகிதூ மிம் மகாமி இப்றாஹீம முஸல்லாஹ்‬‎

என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீt இருக்குமாறு தொழ வேண்டும். முஸ்லிம்

இந்த முதல் ரக்அத்தில் அல்ஹமீது சூராவிற்கு பின் குலி யாஅய்யுஹலி காபிருன் அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹமீது சூராவிற்கு பின் குலீஹுவல்லாஹு அஹது (இஃக்லாஸ்) அத்தியாயம் II2 ஐயும் ஓத வேண்டும்.

سوراتولي جبروني    ஸூரத்துல் காபிரூன்

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ {1} لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ {2} وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ {3} وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ {4} وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ {5} لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ {6}

குல் யா-அய்யுஹல் காFபிரூன் {1}  லா அஃBபுது மா த்'அBபுதூன் {2} வ லா அன்தும் 'ஆBபிதூன மா அஃBபுத் {3} வ லா அன 'அBபிதும் மா 'அBபத்தும் {4} வ லா அன்தும் 'ஆBபிதூன மா அஃBபுத் {5}லகும் தீனுகும் வ லிய தீன். {6}

பொருள்: (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக!

سورة العقلان    ‬‎ஸூரத்துல் இஃகிலாஸ்

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ {1} اللَّهُ الصَّمَدُ {2} لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ {3} وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ {4}

குல் ஹுவல் லாஹு அஹத் {1} அல்லாஹ் ஹுஸ்-ஸமத் {2} லம் யலித் வ லம் யூலத் {3} வ லம் யகுல்-லஹூ குFபுவன் அஹத் {4}

பொருள்: "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! {1} அல்லாஹ் தேவைகளற்றவன். {2} (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. {3} அவனுக்கு நிகராக யாருமில்லை. {4}

இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும். இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.

ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல் புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188

ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும்போது...

‎‫‬‎إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ ۖ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

இன்னஸ் ஸFபா வல்-மர்வத மின் ஷ'ஆ'இரில் லாஹி Fபமன் ஹஜ்ஜல் Bபய்த அவிஃதமர Fபலா ஜுனாஹ 'அலய்ஹி அய் யத்தவ்வFப Bபிஹிமா; வ மன் ததவ்வ'அ கய்ரன் Fப இன்னல் லாஹ ஷாகிருன்'அலீம் ( அல் குர்ஆன்2:158)

பொருள்: ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். 

என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி

الله أكبر - الله أكبر - الله أكبر

அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர்

‎‫لا له إلا الله وحده لا له إلا الله وَحْدُهُ لا له إلا الله لا له إلا الله وحده‬‎ ‎‫عَنْجُسُ وَعْدُهُ وَعبْدَهُ وَهْسْمُ عربی. وحده‬‎

லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரிகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஐ(z)ஸ வஃதஹி, வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(z)ஸாப வஹ்தஹ் முஸ்லிம்

என்ற திக்ரை ஓத வேண்டும். பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும்.



பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும்.

இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது. அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும்.

மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஒதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க

வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக எஸ்ஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று. மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது இரண்டாவது சுற்று. இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.

ஸமீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும். பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் 

""தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு'' அபூதாவூத்

இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

 மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (συώ) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து


கொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும். 

இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)

முக்கிய அறிவிப்பு 

சிலர் ஏனைய மாதங்களைவிட ரஜப் மாத உம்ராவுக்கு சிறப்புகளுள்ளன எனக் கருதிக்கொண்டு இம்மாதத்தில் உம்ரா செய்வதனை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். 

ரஜபில் உம்ரா செய்வது சுன்னத்தானது அல்லது அதற்கு ஏனையவற்றைவிட‌ சிறப்புக்களுண்டு போன்ற கருத்துக்களினடிப்படையில் இவ்வாறு ரஜபை உம்ராவுக்கென‌ பிரத்தியேகமாக ஒதுக்கிவிடுவது கூடாது. எனினும் வருடத்தின் எல்லா நாட்களும் போன்றே ஒரு முஸ்லிம் நன்மையை நாடியவனாக புனிதமிக்க மாதங்களாயினும்சரி உம்ராவிலே ஈடுபடுவது பிரச்சினைகுரிய விடயமல்ல.

இங்கு தூதர்(ஸ‌ல்) அவர்களிடமிருந்தோ அல்லது அவரது தோழர்களிடமிருந்தோ ரஜப் மாதத்திலே நோன்பு நோற்பதற்கான எவ்வித ஆதாரப்பூர்வமான அறிவிப்புக்களும் வரவில்லை. எனவே இங்கு கடமையாவது ஏனைய மாதங்கள் போன்று திங்கள், வியாழன் நோன்புகள் மற்றும் அய்யாமுல் பீழுடைய மூன்று நோன்புகள் மற்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு பிடித்தல் போன்றவையே ஆகும். அவ்வாறுதான் ரஜபில் உம்ரா செய்வதற்கென்றோ அதற்குரிய சிறப்புக்கள் குறித்தோ எவ்வித ஆதாரப்பூர்வமான அறிவிப்புக்களும் தூதரிடமிருந்தோ அல்லது அவரது தோழர்களிடமைருந்தோ வந்ததில்லை.

“ரமழானிலே உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு இணையானது.” என்பது போன்று ரஜபிலே உம்ரா செய்வதற்கென எவ்வித ஹதீஸும் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதில்லை.

ஷரீஅத் வகுத்துத்தராத எந்தவொரு இபாதத்தையும் நேரம் வகுத்துக்கொள்ள முடியாது. இபாதத்துக்கள் விடயத்திலோ அல்லது ஏனைய நற்காரியங்கள் விடயத்திலோ ஷரீஅத் நேரம் குறித்து சிறப்பாக்கித் தந்தாலேயொழிய ஒரு நேரத்திற்கும் இன்னொரு நேரத்திற்குமிடையில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.

எனவே ரஜப் மாதத்தில் உம்ரா செய்வது ஏனைய மாதங்கள் போன்ற கடமைதான். ஆகவே இதே நோக்கில், வருடத்தின் எல்லா நாட்களிலும் உம்ரா செய்வது போன்று கருதி வேறேதும்சிறப்புக்கள் கொடுக்காது உம்ராவை மேற்கொள்வது பிரச்சினைக்குரியதாகாது.




























Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது