ஜனவரி மாதம் சொல்ல வரும் பாடம்

 


ஜனவரி மாதம் சொல்ல வரும் பாடம்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. தூதர்களில் இறுதியானவராகிய மனித குல வழிகாட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடக்கும் நல் உள்ளங்கள், உலக சமாதான விரும்பிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

இரவும் பகலும் மாறிவருவதால் நாட்கள் பிறக்கின்றன என மனிதன் அறிந்து வைத்துள்ளான்.

கால ஓட்டம் என்பது வானங்கள், பூமி ஆகிய இருபெரும் கோழங்களும் ஏனெய

படைப்புகளும் இறைவனால் படைக்கப்படுவதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே உலக நகர்வுகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி பூரணமாக அறிந்தவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைவாக “கலம்” என்ற எழுதுகோல் மூலம் பதிவேடொன்றில் தீர்மானிக்கப்பட்ட முழுமையான ஆயுள்காலத்தில் இருந்து தரப்படும் சில நொடிகளாகும்.

மனிதன் தாயின் கருவறையில் உருவாகும் நான்கு மாத கால இடைவெளிக்குள் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வரும் வானவர் ஒருவர் மூலம் அவனுக்கான கால அளவு பதியப்படுவதும் ஆரம்பமாக பதியப்பட்ட எழுத்தின் இருந்து தரப்படுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அல்லாஹ்தான் இவரையும் பகலையும் நிர்ணயம் செய்கின்றான். நீங்கள் அதை (கணித்து) அறிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதை அவன் அறிந்தவன் (அல் குர்ஆன் 73:20)

அல்லாஹ்வே இரவையும் பகலையும் மாற்றி அமைக்கின்றான். சிந்தனை உடையோருக்கு நிச்சயமாக அதில் படிப்பினை இருக்கின்றது. ( அல் குர்ஆன் அந்நூர்/44)

போன்ற அல்குர்ஆன் வசனங்கள் மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும்.

கால ஓட்டம் உலக நகர்விலும் மனித வாழ்விலும் இரவு பகலாக பரஸ்பரம் மாறி வருவதனால் கால மாற்றம் நிகழ்கின்றது.

 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆங்கில புது வருடத் தொடக்கமாக இருப்பது போலவே உலகில் ஏனெய பல்வேறு மொழிசார் மக்களின் மாதமாகவும் மாறிவிட்டது என்பதே உண்மை.

அது சென்ற ஆண்டைப் போல அல்லாஹ்வின் நாட்டத்தால் 2024 லும் பிறக்க உள்ளது

உலக அழிவு நாளின் குறித்த நொடி வரும் வரை நாட்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளின் பிறப்பும் காணப்படும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் பாடமாகும்.

அதனை ஒருவர் பட்டாசு கொளுத்தி ஆராவாரம் செய்துதுதான் வரவேற்க வேண்டுமானால் நாளின் பிறப்பால் ஆண்டு பிறக்கின்றது என்ற பொதுவிதியின் அடிப்படையில் தினமும் சூரிய உதயத்தோடு அவர் பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரிக்க வேண்டுமல்லவா? அது எவ்வாறு ஏற்புடையது அல்லவோ அவ்வாறே வருடத் தொடக்கத்தில் மகிழ்ச்சியில் மூழ்குவது ஏற்புடையதாகாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நாம் நேர்வழி பெற்று இன்ஷா அல்லாஹ் மற்றவரையும் நேர்வழி பெற செய்வோமாக

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது