Posts

Showing posts from September, 2023

மார்க்கத்தில் உள்ள மீலாது விழா

Image
  மீலாது விழா கொண்டாடும் சகோதரர்களே இஸ்லாமிய மார்க்கத்தில்  இல்லாதா மீலாது விழாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது” என்று கூறிய மார்க்கத்தில் உள்ள மீலாது விழாவை கொண்டாட மீலாது விழா கூட்டத்தினர் ஏனோ இதைக் கடைப்பிடிக்க முன்வருவதில்லை,? ஒரு மீலாது விழா மார்க்கத்தில் உள்ளது. அது வருடத்துக்கு ஒரு தடவை கொண்டாடும் விழா அல்ல. வாராவாரம் கொண்டாடும் மீலாது விழாவாகும். திங்கள்கிழமை நோன்பு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் “அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது” என்கிறார்கள். அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலீ) நூல்: முஸ்லிம்-2152 திங்கட்கிழமை நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த காரணத்தாலும், அவர்கள் திங்கட்கிழமை தான் நபியாக அனுப்பப்பட்டார்கள் என்பதற்காகவும் வாராவாரம் திங்கட் கிழமை நோன்பு வைக்கலாம். மீலாது விழா கூட்டத்தினர் ஏனோ இதைக் கடைப்பிடிக்க முன்வருவதில்லை,? இந்த ம

ரபி உல் அவ்வல் ஹிஜ்ரி 400 க்கு முன் பின்

Image
ரபி உல் அவ்வல் ஹிஜ்ரி 400 க்கு முன்,! பின்,! ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மீலாது விழா கொண்டாட்டங்கள்,!  முஸ்லிம்களிடம் கலைக்கட்டும்! மற்ற நாட்களில் பர்ளு தொழத நபர் கூட இந்த மாதத்தில் அதிகம் ஸலவாத், திக்ர், துஆ செய்வார்கள் இவ்வாறு செய்வதால் கவலை நெருக்கடி வறுமை நீக்கும் என்று கூறி அமல் செய்ய வைப்பார்கள் ஆனால் அப்போது கூட யாரும் தொழுகைக்கு முன் உரிமை கொடுத்து அமல் செய்ய சொல்ல மாட்டார்கள்! இந்த மீலாத்தில் மிக முக்கியமானவை பணம் இரண்டாவது உணவு ஆகும் உணவுக்கே இந்த மீலாத்தில் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்! அல்லாஹ் பாதுகாக்கணும் இந்த மீலாத்தை ஆதரிக்க உண்மை என்று கூற நவதுபில்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களின் தோழர்கள் மீது பொய்யான செய்திகளை இட்டுக்கட்டி கூறுகிறார்கள்!  ஆனால் உண்மை என்ன வென்று நாம் அறிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் ஹதீஸ்களை இமாம்கள் வாழ்ந்த காலம் வரை நாம் பார்த்தலே நமக்கு தெளிவாகி விடும்! 1) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மீலாத் கிடையாது! 2) அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது! 3) உமர் பின் கத்தாப் (ரழி) அவர்க

நவீன மது - போதைப் பொருட்களும் இஸ்லாமும் -முஸ்லிம்களும்

Image
நவீன மது - போதைப் பொருட்களும் இஸ்லாமும் - முஸ்லிம்களும் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் மதுப் பாவனை ஒரு சதாரண ஒன்றாகவே காணப்படுகின்றது. அதன் தீய விளைவு பற்றியோ, அதை உபயோகிப்பதால் கிடைக்கவிருக்கின்ற இறை தண்டனை பற்றியோ, இஸ்லாமிய மார்க்கத்தில் மது பாவிப்பவருக்கு என்ன தண்டனை என்பது பற்றியோ சிந்திக்காமல் விரும்பியவர் பாவிக்கலாம், விரும்பாதவர் விட்டு விடலாம் என்றளவில்தான் காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி மதுபானம் அருந்துவதுதானே மார்க்கத்தில் விலக்கப்பட்டுள்ளது, வேறு பெயர்களில் நவீன கண்டுபிடிப்பாளர்களினால் சமுகத்தை சீர்கெடுக்கவென தயாரிக்கப்பட்ட பொருட்களை உபயோகிக்கலாம்தானே என்று இன்றைய சமூகம் அப்பொருட்களைப் பாவிப்பதால் ஏற்படும் உடல், உள ரீதியான பாதிப்புக்களை அறியாமலும், சமூகத்தில் தம்மோடு உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை உணராமலும், குறித்த போதைப் பொருட்களை உபயோகிப்பதால் தான் அதை விட்டும் மீள முடியாமல் தனது பொருளதாரமும் அழிந்து தானும், தன் தயவில் வாழும் மனைவி மக்களும் கஷ்டமான நிலைமைக்கு தள்ளப்படுவதை உணராமலும் உபயோகித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி ஹெரோயின், ஐஸ் போன்ற

நபி (ஸல்) வழியில் ஓதிப்பார்க்கும் முறையும் துஆக்களும்

Image
நபி (ஸல்) வழியில் ஓதிப்பார்க்கும் முறையும் துஆக்களும் நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம். 📌 வலிக்கு ஓதிப்பார்த்தல் 🤲🤲 நபியவர்கள் வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்முடைய ஆட்காட்டி விரலில் எச்சிலை தொட்டு அதனால் மண்ணைத் தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஓதிப் பார்த்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி, بِاسْمِ اللهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، لِيُشْفَى بِهِ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا பிஸ்மில்லாஹி. துர்பத்து அ