மார்க்கத்தில் உள்ள மீலாது விழா

 


மீலாது விழா கொண்டாடும் சகோதரர்களே இஸ்லாமிய மார்க்கத்தில் 

இல்லாதா மீலாது விழாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது” என்று கூறிய மார்க்கத்தில் உள்ள மீலாது விழாவை கொண்டாட மீலாது விழா கூட்டத்தினர் ஏனோ இதைக் கடைப்பிடிக்க முன்வருவதில்லை,?

ஒரு மீலாது விழா மார்க்கத்தில் உள்ளது. அது வருடத்துக்கு ஒரு தடவை கொண்டாடும் விழா அல்ல. வாராவாரம் கொண்டாடும் மீலாது விழாவாகும்.

திங்கள்கிழமை நோன்பு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் “அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது” என்கிறார்கள். அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலீ) நூல்: முஸ்லிம்-2152

திங்கட்கிழமை நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த காரணத்தாலும், அவர்கள் திங்கட்கிழமை தான் நபியாக அனுப்பப்பட்டார்கள் என்பதற்காகவும் வாராவாரம் திங்கட் கிழமை நோன்பு வைக்கலாம். மீலாது விழா கூட்டத்தினர் ஏனோ இதைக் கடைப்பிடிக்க முன்வருவதில்லை,?

இந்த மீலாது கொண்டாடினால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பண்ண முடியாது, ரீமிக்ஸ் செஞ்சி பஜனம் பாட முடியாது, பசியோடு இருக்க வேண்டும் என்பதால் மீலாது விழா கூட்டத்தினர் இதைக் கடைப்பிடிக்க முன்வருவதில்லை,?

இந்த மீலாதுக்கு ஆலிம்களுக்கு வருமானமும் புலவு சோறும் கிடைக்காது என்பதால் ஆலிம்களுக்கும் இந்த மீலாது விழா எடுத்துகாட்டா கசப்பாக உள்ளது.

ஆலிம்களுக்கு படித்த ஆலிம்களே இதை கொண்டாடும் போது ஒன்றும் தெரியாத ஆசாமிகள் என்ன செய்வார்கள்

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது