ரபி உல் அவ்வல் ஹிஜ்ரி 400 க்கு முன் பின்



ரபி உல் அவ்வல் ஹிஜ்ரி 400 க்கு முன்,! பின்,!

ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மீலாது விழா கொண்டாட்டங்கள்,!  முஸ்லிம்களிடம் கலைக்கட்டும்!

மற்ற நாட்களில் பர்ளு தொழத நபர் கூட இந்த மாதத்தில் அதிகம் ஸலவாத், திக்ர், துஆ செய்வார்கள் இவ்வாறு செய்வதால் கவலை நெருக்கடி வறுமை நீக்கும் என்று கூறி அமல் செய்ய வைப்பார்கள் ஆனால் அப்போது கூட யாரும் தொழுகைக்கு முன் உரிமை கொடுத்து அமல் செய்ய சொல்ல மாட்டார்கள்!

இந்த மீலாத்தில் மிக முக்கியமானவை பணம் இரண்டாவது உணவு ஆகும் உணவுக்கே இந்த மீலாத்தில் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்!

அல்லாஹ் பாதுகாக்கணும் இந்த மீலாத்தை ஆதரிக்க உண்மை என்று கூற நவதுபில்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களின் தோழர்கள் மீது பொய்யான செய்திகளை இட்டுக்கட்டி கூறுகிறார்கள்! 

ஆனால் உண்மை என்ன வென்று நாம் அறிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் ஹதீஸ்களை இமாம்கள் வாழ்ந்த காலம் வரை நாம் பார்த்தலே நமக்கு தெளிவாகி விடும்!

1) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மீலாத் கிடையாது!

2) அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

3) உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

4) உஸ்மான் பின் அஃப்ஹான் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

5) அலி இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

6) இமாம் அபூ ஹனிபாஃ (ரஹ்) ஹிஜ்ரி 150 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

7) இமாம் மாலிக் (ரஹ்) ஹிஜ்ரி 170 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

8) இமாம் ஷாபிஈ (ரஹ்) ஹிஜ்ரி 204 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

9) இமாம் அஹ்மத் இப்னு பின் ஹம்பல் (ரஹ்) ஹிஜ்ரி 241 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

10) இமாம் புகாரி (ரஹ்) ஹிஜ்ரி 256 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

11) இமாம் முஸ்லீம் (ரஹ்) ஹிஜ்ரி 261 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

12) இமாம் அபூ தாவூத் (ரஹ்) ஹிஜ்ரி 275 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

13) இமாம் திர்மிதி (ரஹ்) ஹிஜ்ரி 279 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

14) இமாம் நஸயீ (ரஹ்) ஹிஜ்ரி 303 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

நபி ( ஸல் ) அவர்கள் காலம் முதல் ஹதீஸ்களை சேகரித்த இமாம்கள் வாழ்ந்த காலம் வரை இந்த மீலாத் என்று ஒன்று எந்த இடத்திலும் கிடையாது!

இதனால் தான் நம்மால் இந்த மீலாத் என்று ஒரு வார்த்தை கூட எந்த ஹதீஸ்களிலும் காண முடியவில்லை!

இந்த மீலாத் சம்பந்தமாக ஹதீஸ் கலை இமாம்கள் அல்லது இமாம் ஷாபிஈ ஹனபி ஹம்பளி மாலிகி ஆகிய நான்கு இமாம்கள் கூட எதுவும் கூற வில்லை!

மீலாத் எனும் பித்ஆத் தோன்றிய வரலாறு சுருக்கம்,!

ஃபாதிமய்யாக்கள் என்ற ஷீஆப்பிரிவினை சேர்த்த அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி என்பவனால் முதன் முதலில் மௌலித் எனும் பித்ஆத்தை உருவாக்கினான்!

ஃபாதிமிய்யாக்கள் (ஃபாதிமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்) என தமக்கு தாமே பொய்யான பெயர் சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம்!

பனுஉபைத் என்ற கூட்டத்தினர் பக்தாதிலுள்ள அப்பாஸியர் ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து, அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்கள்! 

இவர்கள் ஆட்சிக்கு வந்தது அந்த நாட்டு மக்களுக்கும் மற்றும் தமது நிர்வாகத்தில் உள்ள மக்களுக்கும் இவர்கள் மீது வெறுப்பு காணப்பட்டது!

இதை சமாளிப்பதற்காகவும்! தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள் தமக்கெதிராக எந்த விதமான புரட்சியில் ஈடுபடாமல் இருப்பதற்காகவும் இன்னும் மக்களின் கவனத்தை தமது பக்கம் ஈர்ப்பதற்காகவும் முதன் முதலில் மீலாத் எனும் ஒன்றை உருவாக்கினார்கள்!

இந்த மீலாத் மக்கள் இடையே அதிகம் வரவேற்பு பெற்றது இதனால் ஷியாக்கள் மேலும் இது போன்று நிறைய உருவாக்கினார்கள்!

1) மவ்லிதுன் நபி

2) மவ்லிது அலி

3) மவ்லிது ஹஸன்

4) மவ்லிது ஹுஸைன்

5) மவ்லிது ஃபாத்திமா

இது போன்று நிறைய பித்அத் ஆன மவ்லீத்களை உருவாக்கினர்கள்!

அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ இவனைத் தொடர்ந்து ‘அல்முயிஸ’ என அழைக்கப்படும் இவனது மகன் மீலாத்தை பேணி வந்தான்!

இப்படி தான் வரலாற்றில் மீலாத் தோன்றியது!

(நூல் : அர்ரவ்ழதைன் ஃபீ அக்பாரித்தவ்லதைன் : 1 / 201)

இஸ்லாம் பொறுத்த வரை அனைத்து செயல்களையும் அனைத்து விதமான ஒழுக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி கொடுத்து உள்ளார்கள்!

மலம் ஜலம் எவ்வாறு கழிக்க வேண்டும்? கணவன் மனைவி எவ்வாறு சேர கூடாது! ஹைலு நிபாஸ், குளிப்பு கடமை என அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக கூறி உள்ளார்கள்!

இவ்வளவு சொல்லி கொடுத்த நபி (ஸல்) அவர்கள் ஒரே ஒரு முறை கூட இந்த மீலாத் பற்றி குறிப்பிட வில்லை!

இப்போது உள்ளவர்கள் போன்று மீலாத்தில் இவர்களே சுயமாக எழுதிய ஷிர்க் ஆன கவிதைகளை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யாரும் பாட வில்லை!

அதே போன்று இந்த ரபீயுல் அவ்வல் முதல் 10 நாட்களில் அதிகம் ஸலவாத் திக்ர் ஓதுவார்கள் பின்பு நான் இவ்வளவு ஸலாவத் மற்றும் திக்ர் ஓதினேன் என்று பிறரிடம் அதை எத்தி வைப்பார்கள் பின்பு கூட்டாக துஆ செய்வார்கள் இவை எல்லாமே தெளிவான வழிகேடு ஆகும்!

வருடத்தில் ஒரு நாள் அமர்ந்து நபி (ஸல்) அவர்களை சிறப்பித்து எந்த ஸஹாபாக்களும் கொண்டாடியாது கிடையாது! இவை எல்லாமே பின்னால் வந்தவர்கள் உருவாக்கி கொண்டது!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் எதை செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் உங்களுடைய முடிவுக்கு விட்டுவிட்டேனோ அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டுவிடுங்கள்!

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்!*(நூல் : புகாரி : 7288)

இந்த ஹதீஸ் நமக்கு போதுமானது நபி (ஸல்) அவர்களின் சொல் செயலை மட்டுமே நாம் பின் பற்ற வேண்டும் என்று!

நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை அல்லது செய்ய சொல்லாத ஒன்றை நாம் பின் பற்ற கூடாது!

பித்அத் என்றால் என்ன?

பித்அத் என்றால் புதுமை ஆகும்! புதியாக ஒன்றை ஏற்படுத்துவது பித்அத்தை குறிக்கும்!

ஆனால் இஸ்லாத்தில் புதுமை ஏற்படுத்த அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது! 

பித்அத்தில் நல்லது கேட்டது என்று எதுவும் கிடையாது! பித்அத் என்றாலே வழிகேடு தான்! வழி கேடு அனைத்தும் நரகமே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் வேதமகும், அழகிய வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களாகும், (மார்க்கத்தில்) புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகள், தீயவிடயஙகளாகும்! பித்அத் எல்லாம் வழி கேடுகளாகும், வழி கேடுகளெல்லாம் நரகத்தில் தான்!  (நூல் : நஸாயீ :1577)

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்!(அல்குர்ஆன் : 18 : 104)

அல்லாஹ் இது போன்று பித்அத்களை விட்டு நம்மை பாதுகாப்பானாக!

நம்மை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்!

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது