ஜகாத் கொடுப்போம்,! நம் செல்வத்தை தூய்மைப்படுத்துவோம்,!

 

ஜகாத் கொடுப்போம்,! நம் செல்வத்தை தூய்மைப்படுத்துவோம்,!

● இஸ்லாத்தின் கடமைகள் யாவை.?

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவருக்கு ஐந்து காரியங்கள் கடமையாகின்றன.

 1) கலிமா ஷஹாதத் (அதாவது முஸ்லிம் என்கின்ற பதவிப் பிரமாணம்)

2) தொழுகை (இறைவனை தினமும் ஐந்து வேளை வணங்குதல்)

3) நோன்பு (பசி, தாகம், இச்சை, இவைகளை விட்டு விலகி இருத்தல்)

4) ஜகாத் (மார்க்க வரி)

5) ஹஜ் யாத்திரை ( இறை இல்லம் காபாவை தரிசித்தல்)

● நான்காவது கடமை ஜகாத்தை பற்றி அல்லாஹ்வின் கட்டளை,!

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ 

 தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள் திருக்குர்ஆன்  2:43

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ 

தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முற்படுத்தும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். திருக்குர்ஆன்  2:110

● எந்த அளவு செல்வம் இருந்தால் ஜக்காத் கடமை,?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: (வெள்ளியில்) ஐந்து ‘ஊக்கியா’வுக்குக் குறைந்ததில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ‘வஸ்க்’ குக் குறைவான (தானியத்)தில் ஸகாத் இல்லை. இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 1405

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தானியங்களில்) ஐந்து "வஸ்க்"குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; (கால்நடைகளில்) ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து "ஊக்கியா"க்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லீம், 1780 - 1782 - 1784 - 1785

ஊக்கியா என்றால் என்னா,?

ஒரு ஊக்கியா’ என்பது 40 திர்ஹம்,  ஐந்து ஊக்கியா என்பதோ 200 திர்ஹம்,

● திர்ஹம் என்றால் என்னா,?

திர்ஹம் என்பது  வெள்ளி நாணயம்) அதாவது வெள்ளிக்காசு,

● இப்போது வெள்ளிக்காசு புழக்கத்தில் இல்லை என்னா செய்வது.?

ஒரு திர்ஹம் (வெள்ளிக்காசு) என்பது 3.6 கிராம், 200 திர்ஹம் (வெள்ளிக்காசு) என்பது (200×3,6=720) 720 - கிராம் வெள்ளியின் அளவுக்கு மேல் மதிப்பிலான உங்களிடத்தில்  செல்வம் இருந்தால் அதாவது இன்றைய நிலவரப்படி 24/03/2024  வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 80.50 (720×₹ 80.50) = 

₹ 57.960.00  க்கு மேல் உங்களிடம் செல்வம் இருந்தால் ஜகாத் கடமை,!

 ● செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! என்று அல்லாஹ் கட்டளை,!

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ 

 (முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த் தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். திருக்குர்ஆன்  9:103

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ 

யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு இருந்தது. திருக்குர்ஆன்  51:19

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளு நராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழி அளிக்குமாறு அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள். புகாரி, 1395

● நம்மிடம் உள்ளது எது வெல்லாம் செல்வங்கள்,?

 தங்கம்,வெள்ளி, தங்க நகைகள்,வெள்ளி நகைகள், ரூபாய் நோட்டுகள், (பணம்) காலி மனை, நீங்கள் வாழும் வீடு (உங்கள் பெயரில் இருந்தால்) பல வீடுகள் பங்களாக்கள் கடைகள் இரண்டு நான்கு சக்கர வாகனம், விவசாய நிலம், பண்ணை,தோட்டம்,  பிளாட்டினம், வைரம், முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், கோமேதகம் வைடூரியம்,உங்களுக்கு வாரிசு உரிமையில் வந்த வாகனங்கள் மன், பொன், பணம், பிளாட்டினம், வைரம், முத்து, பவளம், வைடூரியம், கலைப் பொருட்கள் இதில் எதாவது உங்கள் மற்ற உறவினர்கள் நண்பர்கள் வழியாக அன்பளிப்பாக வந்தாலும், இந்த செல்வத்துக்காக  வாழ்வில் ஒரு முறை (40 - ல் - 1பங்கு) இரண்டரை சதவீதம் ஜக்காத் எடுப்பீராக,

● உலக அகராதியில் செல்வம் என்றால் என்னா,?

 பொருள், பணம் ,சொத்து,  இவைகள் தான் உலக அகராதியில் செல்வங்கள், அப்படி  என்றால் மேல் கூறப்பட்டவை அனைத்தும் திருக்குர்ஆன்  9:103 / 3:19 படி செல்வமே ஆகும்,

இதில் வருத்தத்தக்க செய்தி என்னவென்றால் 80 சதவீதம் கடந்த கால இஸ்லாமிய அறிஞர்கள் உலமாக்கள் மத்ஹாப்பு இமாம்கள் மேல குறிப்பிட்ட பொருட்களில் பெருவாரியான  பொருட்களுக்கு ஜக்காத் இல்லை என்று ஏகமானதாக முடிவு என்று இவர்கள் மறுக்கின்றார்கள். இதனால் செல்வந்தர்களுக்கு லாபம் ஏழைகளுக்கு நஷ்டம் திருக்குர்ஆன்  9:103 / 3:19 வசனத்திற்கு அல்லாஹ்வின் வார்த்தைக்கு புகாரி, 1395 ன்படி அல்லாஹ்வின் தூதரின் வார்த்தைக்கும் மறு செய்கிறார்கள், இதனால் ஏழையின் உரிமை பறிக்கப்படுகிறது இதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் பலவீனமானவை,

● கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா,?

 கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ நேரடி ஆதாரம் இல்லை இதற்கு மாறாக ஒரு சில பலவீனமான ஹதீஸை கொண்டு 80 சதவீதம் கடந்த கால இஸ்லாமிய அறிஞர்கள் உலமாக்கள் மத்ஹாப்பு இமாம்கள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பத்துவாக்கள் கொடுக்கிறார்கள் இது அவர்களின் ஏகமானதாக முடிவு ஒருமித்த கூற்று தான் எந்த ஆதாரமும் இல்லை இதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் பலவீனமானவை இதனால் செல்வந்தர்கள் மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க அஞ்சுகிறார்கள் ஒரு பொருளுக்கு ஒரு முறை என்றால் தளரமாக கொடுத்து விடுவார்கள் அதனால் ஏழைகள் பயனடைவார்கள்,

● வருமானத்தில் இருந்து ஜகாத் எடுப்பீராக என்று அல்லாஹ் கூறுவதாக 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்;, புகழுக்குரியவன் என்பதை அறிந்து   கொள்ளுங்கள் திருக்குர்ஆன் 2:267

இங்கு வருமானத்தையும் - விளைச்சலையும் இறைவன் பிரித்துச் சொல்கிறான். இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த வசனம் அமைந்துள்ளது.

விளைச்சலைப் பொருத்தவரை அதன் அறுவடை நாளில் - அது பலன் தரும் நாளில் அதன் ஜகாத்தை வழங்கி விட வேண்டும். அது ஆண்டுக்கு ஒரு முறையோ - இருமுறையோ - பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறையோக் கூட இருக்கலாம். இதர சொத்துக்கு இந்த விதி இல்லை ஆண்டுக் கொருமுறை என்ற சட்டம் உள்ளது.

● நமக்கு எதையெல்லாம் வருமானம்,?

உங்களுக்கு தினசரி கூலி வருமானம், வாரந்திர கூலி வருமானம், மாதா சம்பளம் வருமானம், வீடு கடை வாகன வாடகை வருமானம், விவசாயத்தின் மூலமாக வரும் லாபம் வருமானம், அன்பளிப்பு மூலம் வருபவை வருமானம்,  கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை, பால் பண்ணை, இதில் வரும் அனைத்து லாபமும் வருமானம், ஹலால் வழியில் உங்களுக்கு இன்றைய நவீன உலகில் பல பெயர்களில் வரும் செல்வம் வந்தாலும் வருமானம்,

● வருமானத்தில் ஜகாத் எப்போது கொடுக்க வேண்டும்,?  

உங்கள் கையில் வந்த உடன் (40 - ல் - 1) இரண்டரை சதவீதம் ஜக்காத் எடுப்பீராக, அதை அன்றே  ஏழைக்களுக்கு வழங்கினாலும் சரி அல்லாது தனியாக சேகரித்து 3 மாதத்திற்கு அல்லாது 6 மாதத்திற்கு அல்லாது வருடம் வருடம் ஏவழங்கினாலும் சரி உங்கள் விருப்பம்

ஆனால் வருத்தத்தக்க செய்தி என்னவென்றால் 80 சதவீதம் கடந்த கால இஸ்லாமிய அறிஞர்கள் உலமாக்கள் மத்ஹாப்பு இமாம்கள் இந்த வருமானம் உங்களிடம் ஒரு வருடம் தங்கினால் மட்டுமே ஜக்காத் என்று ஃபத்வாக்கள் வழங்கி உள்ளார்கள் இதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ நேரடி ஆதாரம் எதுவும் இல்லை இது அனைத்தும் அவர்களின் ஏகமானதாக முடிவு ஒருமித்த கூற்று தான் இதனால் ஏழையின் உரிமை பறிக்கப்படுகிறது இதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் பலவீனமானவை

● எவ்வளவு கொடுக்க வேண்டம்,?எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும்,?

குதிரையும் அடிமையையும் நான் மன்னித்து விட்டேன் உங்களுடைய செல்வங்கள் உடைய ஜக்காத் நிறைவேற்றுங்கள் ஒவ்வொரு இருநூருக்கு ஐந்து என்ற வகையில், நூல் -  நஸாயி 

200 %× 2.5 = 5  & 200 ÷ 40 = 2.5  /   40 - ல் 1 - ஒரு பங்கு அதவாது இரண்டரை சதவீதம் ஜகாத் கடமை,!

● ஜக்காத் எடுக்காதவர் வழங்காதவர்களுக்கான தண்டனை

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَـٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ 

 நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்) திருக்குர்ஆன்  9:34-35

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின், (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடை களைப் பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்” என்று சொல்லும். இவ்வாறு கூறிவிட்டு, பின்வரும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்:

தமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருளில் கஞ்சத்தனம் செய்வோர், அது தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்(து சேமித்)தார்களோ அது மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் சுற்றப்படும். (குர்ஆன் 3:180) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 1403

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லீம், 1803 - 1804 - 1805

அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவிற்குச் சென்றேன். அங்கு ஓர் அவையில் பங்கேற்றேன். அந்த அவையில் குறைஷிப் பிரமுகர்களும் இருந்தனர். அப்போது மிகவும் சொரசொரப்பான ஆடையும் முரட்டுத்தனமான தோற்றமும் முகமும் கொண்ட ஒரு மனிதர் (அங்கு) வந்து அவர்கள் முன் நின்று, "(ஸகாத் வழங்காமல்) செல்வத்தைக் குவித்து வைத்திருப்போருக்கு "நற்செய்தி" கூறுக: நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் அவருக்கு உண்டு. அந்தக் கல் அவர்களில் ஒருவரது மார்புக் காம்பின் மேல் வைக்கப்படும். உடனே அது அவரது தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அந்தக் கல் அவரது தோளின் மேற்பகுதியில் வைக்கப்படும். உடனே அது மார்புக்காம்பின் வழியாக ஊடுருவி வெளியேறும்" என்று கூறினார். முஸ்லீம், 1813

● ஜகாத் என்பது மக்களின் அழுக்கு,!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஜகாத் என்பது மக்களின் அழுக்கு என்கிறார்கள் அந்த அழுக்கை நம் செல்வத்திலிருந்து அகற்றுவோம் அப்புறப்படுத்துவோம்

தங்கத்தையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது’ என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை’ என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 1417

எஞ்சிய பொருட்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்று  சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் ஜகாத்தை ஏன் ஹராமாக்கிக் கொண்டார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விளக்கும் போது, ‘இவை மனிதர்களின் அழுக்குகள்’ என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம் 1784)

ஜகாத் கொடுத்த பின் மீதமுள்ள பொருட்கள் தூய்மையானது என்றால் ஜகாத்தாக வெளியேற்றப்பட்டது அசுத்தம் என்றாகின்றது. மனிதர்களுடைய அசுத்தமான பொருட்கள் என்ற கருத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மனிதர்களின் அழுக்கு என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஜகாத்தின் நோக்கம் பொருட்களைத் தூய்மைப்படுத்துவது தான் என்பதை இது மேலும் உறுதி செய்கின்றது.

● ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் யார்?

ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள் 8 கூட்டத்தினர் அவர்கள்அல்லாஹ் கூறுகிறான்  

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும்  தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். திருக்குர்ஆன் 9:60

1 - பரம ஏழைகள்

பரம ஏழைகள் உணவிலிருந்தும், குடிபாணத்திலிருந்தும் மற்றும் ஆடையிலிருந்தும் தனது தேவையும் தனது குடும்ப தேவையையும் நிறைவேற்ற பொருளாதாரம் இல்லாதவர்கள்.

2 - ஏழைகள்

ஏழைகள் மிஸ்கீன் என்பவர்கள் தனது வாழ்க்கை செலவு பூரணமாக இல்லாதவர்கள்.உதாரணமாக ஒருவருக்கு 200ரூபாய் தேவைப்பட்டு 100ரூபாய் இருப்பவர்கள். 

3 - ஸகாத்தை வசூலிப்பவர்கள்

ஸகாத்தை வசூலிப்பவர்கள் ஸகாத் பணத்தை ஒன்று சேர்த்து அதனை உரிளவர்களுக்கு பிரித்து கொடுக்க கூடியவர்களுக்கு அந்த நாடு பணம் கெபடுக்காமல் விட்டால் ஸகாத்தின் பணத்திலிருந்து அவர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும். ஏன் எனறால் அவரகள் அதில் அவர்களை அர்பனிக்கிறார்கள். வேலை செய்ய கூடியவர்கள் என்றால் அதனைசேர்ப்பவர்கள்,எழுதவர்கள்,பாதுகாப்பவர்கள் மற்றும் தகுதியுடையவர்களுக்கு பிரிதிது கொடுப்பவர்களும் அடங்குவர்

4 - உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்கள்

உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்கள் அவர்களின் சமூகத்தில் வழங்கப்படும் தலைவர்கள்,இஸ்லாத்தை ஏற்பார்கள் என்றோ அல்லது கெடுதியை தடுப்பார்கள் என்றோ ஆதரவு பெற்ற வைக்கப்படக்கூடியவர்கள் அல்லது அவர்களுடைய ஈமானின் பலத்தின் காரணமாக முஸ்லிம்களை அவர்களின் எதிரியிலிருந்து பாதுகாப்பார்கள் என்று ஆதரவு வைக்கப்படக் கூடியவர்கள் அவர்களின் உள்ளத்தில் அன்பு உருவாகும் வரை ஸகாத் பணத்திலிருந்து கொடுப்பார்கள்

5 - அடிமைகள்

அடிமைகள் உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை இவர் தன்னை தன்னுடைய அடியானிடம் இருந்து விலைக்கு வாங்கியவர் இவருடைய தேவையான அளவுக்கு பணம் கொடுக்கப்படும் அவர்கள் ஒவ்வொருவரும் சுவந்திரவாதிகளாகவும் கொடுக்கல் வாங்களி;ல் பிரயோசனம் பெறக்கூடியவர்களாகவும் சமூகத்தல் பயன்மிக்க பிரயையாக மாறவும் மபற முடியும். அல்லாஹ்வின் வனக்கங்களை பூரணமாக நிறைவேற்ற முடியும், அவ்வாறுதான்

6 - கடன்காரர்கள்

கடன்காரர்கள் கடன் வந்தால் கடனாளியாகும் கடனாளிகள் இரண்டு வகை படுவார்கள் முதலாமவர் அவர்கள் அவருடைய தேவைக்காக கடன் அடுத்த ஏழை மனிதர் வருடைய கடனைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் கொடுக்கப்படும் இரண்டாவது மனிதர் ஒரு கூட்டத்தை சீர்படுத்துவதற்காக கடன் கொடுத்தவர் அவர் பணக்காரராக இருந்தாலும் கொடுக்கப்படும்

7 - வழிப்போக்கன்

வழிப்போக்கன் பணம் இல்லாமல் பிரயாணம் தீர்ந்துபோன பிரயாணி

8 - அல்லாஹ்வுடைய பாதையில் 

போர் வீரர்களுக்கும், ஹிஜராத் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் எல்லா நல்லறங்களும் இதில் அடங்கும், முஸ்லிம்களுக்கு நன்மை செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் அடங்கும் , ஆனால் மேலே குறிப்பிட்ட ஏழு நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், மிஞ்சியதை அல்லாஹ்வின் பாதையில் செலவிடலாம் ,

● ஜகாத் கொடுக்க உறுதிமொழி

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், தொழு கையைக் கடைப்பிடிப்பதாகவும் ஸகாத் வழங்குவதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக் கும் நன்மையையே நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) எடுத்துக் கொண்டேன். புகாரி,1401

இன்ஷா அல்லாஹ் நீங்களும் நானும் இந்த உறுதி மொழியை எடுத்துக் கொள்வோமா அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிவானாக

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது

ரமலானின் இரவு வணக்கங்கள்