Posts

Showing posts from March, 2024

ஜகாத் கொடுப்போம்,! நம் செல்வத்தை தூய்மைப்படுத்துவோம்,!

Image
  ஜகாத் கொடுப்போம்,! நம் செல்வத்தை தூய்மைப்படுத்துவோம்,! ● இஸ்லாத்தின் கடமைகள் யாவை.? ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவருக்கு ஐந்து காரியங்கள் கடமையாகின்றன.  1) கலிமா ஷஹாதத் (அதாவது முஸ்லிம் என்கின்ற பதவிப் பிரமாணம்) 2) தொழுகை (இறைவனை தினமும் ஐந்து வேளை வணங்குதல்) 3) நோன்பு (பசி, தாகம், இச்சை, இவைகளை விட்டு விலகி இருத்தல்) 4) ஜகாத் (மார்க்க வரி) 5) ஹஜ் யாத்திரை ( இறை இல்லம் காபாவை தரிசித்தல்) ● நான்காவது கடமை ஜகாத்தை பற்றி அல்லாஹ்வின் கட்டளை,! وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ   தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள் திருக்குர்ஆன்  2:43 وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ  தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முற்படுத்தும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். திருக்குர்ஆன்  2:110 ● எந்த அளவு செல்வம் இருந்தால்

இரவுத்தொழகை "20" ரக்அத்துகளா அ‌ல்லது "8" ரக்அத்துகளா ஹதீஸ்க்கள் ஓர் பார்வை

Image
  இரவுத்தொழகை "20" ரக்அத்துகளா அ‌ல்லது "8" ரக்அத்துகளா ஹதீஸ்க்கள் ஓர் பார்வை கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.  1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்)  3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)  4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை)  ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்கு 70 % ஆலிம்கள் மக்களிடத்தில்   தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்களா உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம்.  உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத்கள் பற்றிய அறிவிப்புக்களை ஓரு பார்வை,

ரமலான் தரும் நன்மைகள்

Image
  ரமலான் தரும் நன்மைகள்  எந்த ஒரு பயிற்சியை மேற்கொள்வதற்கும், உடல் சார்ந்த, அறிவு சார்ந்த ஒரு தகுதியை நாம் நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆன்மிகம் சார்ந்த நல்லருளை பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் புனித ரமலான் மாதத்தை நமக்கு அருளி இருக்கின்றான். புனித ரமலான் நாட்களில் நாம் மேற்கொள்ளும் பயிற்சிகள், பின்நாளில் நமது செயல் களில் பிரதிபலிப்பதை நாம் உணர முடியும்.  பாவங்களாலும், கெட்ட செயல்களாலும் கடினப்பட்டுபோன மனங்களையும், உடற்கூறுகளையும் மென்மைப்படுத்த மனிதனை முதலில் பக்குவப்படுத்த வேண்டும். உடலில் திமிர், மனதில் ஆணவம் இவை இரண்டும் இருக்கின்ற வரையில் மனிதன் நியாயத்தின் பக்கம் திரும்பமாட்டான். எனவே முதலில் அதை மாற்றவேண்டும்.  அவனுக்கு பசியாலும், தாகத்தாலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் பலவீனமான உடலும், மனமும் பாவச்செயலை எண்ணிப் பார்க்கவே அச்சம் கொள்ளும். ஏழைகள் அனுபவிக்கும் பசியின் கொடுமையும், தாகத்தின் தவிப்பையும் அவன் உணர்ந்து கொள்வான். இதன்மூலம் அவன் இறைவனை நோக்கி பயணிக்கத்தொடங்குவான்.  ஈமானின் மறுபெயரே இறையச்சம். மனிதனிடம் இறையச்சம் தஞ்சம் கொள்ளும் போது நன்றியுணர்ச்சியும் அவனிடம் சேர்ந்து கொள

நோன்பின் மகத்துவம்

Image
  நோன்பின் மகத்துவம்.  இஸ்லாம் போதிக்கும் அடிப்படையான இபாதத்துக்களில் நோன்பும் ஒன்றாகும். ரமழான் மாதத்தில் நோன்பிருப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். நோன்பின் மாண்புகளையும் மகத்துவங்களையும் புரிந்து கொள்ள இஸ்லாம் அதற்கு வழங்கியுள்ள சிறப்புக்களை அறிந்து கொள்வது முக்கியமாகும்.  ஆரம்ப காலங்களில் குடும்பத்தில் மூத்தவர்கள் அனைவரும் நோன்பிருப்பதால் சிறுவர்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் நோன்பு என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப் படும் ஒரு இபாதத்தாக இருந்தது. இந்த நிலை இப்போது குறைந்து வருகின்றது. வளர்ந்தவர்களில் பலரும் தொழிலைக் காரணம் காட்டி நோன்பு நோற்பதைத் தவிர்த்து வருகின்றனர். இளம் சந்ததிகளிடமும் இந்தப் போக்கு வளர ஆரம்பித்துள்ளது. முன்பெல்லாம் தொழாதவர்கள் கூட நோன்பை விடாத அளவுக்கு வாழையடி வாழையாக வந்த வழிபாட்டு முறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிப்பது ஆபத்தான அறிகுறியாகும். எனவே, இது குறித்து விழிப்புணர்வூட்டுவது அவசியமாகும்.  1. இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று: நோன்பு என்பது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். இது இல்லாமல் இஸ்லாம் எனும் கட்டிடத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ரமழ