பிப்ரவரி 14 காதலர் தினம் ஆபாச தினம் கற்பு கொள்ளையர் தினம்.


 பிப்ரவரி 14 காதலர் தினம், ஆபாச தினம், கற்பு கொள்ளையர் தினம்,

உலகத்தில் ஐ.நா.சபை ஆண்டுதோறும் இருக்கிற ஒரு வருஷத்தினுடைய 365 தினங்களுக்கும் ஒவ்வொரு பெயரை வைத்து விட்டது. ஏறத்தாழ இன்னும் கொஞ்சநஞ்ச தினங்கள் தான் பாக்கி. அன்னையர் தினம், தந்தையர் தினம் எல்லா தினங்களும். அந்த வரிசையில் ஒட்டுமொத்த மனித உலகை பிடித்திருக்கிற முஸீபத்தான ஒரு தினம் காதலர் தினம் பிப்ரவரி 14 வருகிற போது உலகத்தினுடைய அசிங்கமான சக்திகள் அத்தனையும் இதில் உருவெடுத்துக்கொள்கிறது. கெட்டுப்போன கலாச்சாரங்களை எல்லாம் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளுதா உலகம் என்று யோசிக்க தக்க ஒரு ஆபாசமான சூழ்நிலைகள் இன்றைக்கு பரவி இருப்பதை பார்க்கிறோம்.

இஸ்லாமிய பெருநாட்கள் என்றால் இரண்டு பெருநாட்கள் பெரிய பெருநாட்கள் ரமலானும்,பக்ரீத்தும் அதை தாண்டி பெருநாட்கள் என்றால் ஒவ்வொரு ஜும்ஆவும் பெருநாட்கள் ஏனைய விசேஷங்கள் என்றால் குர்ஆனும் ஹதீஸும் வலியுறுத்துகின்ற லைலத்துல் கதிர் இரவு, முஹர்ரம் ஆஷுராவுடைய நாள், துல்ஹஜ்வுடைய அரபா நாள் மார்க்கம் வரையறுத்ததைத் தாண்டி எந்த ஒரு தினங்களும் எந்த ஒரு விசேஷங்களும் நம்முடைய கொண்டாடத்திற்கு அனுமதி இல்லை. காரணம் இது நிறைவும் பூரணமும் செய்யப்பட்டு விட்ட ஒரு மார்க்கம்.

ஆபாசங்களையும் வணிக நோக்கிலும் இன்றைக்கு நிறைய தினங்கள் வளர்க்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு பெயர் அந்த அடிப்படையில் தான் கெட்டுப்போன கலாச்சாரத்தினுடைய பூமிகளில் இருந்து இன்றைக்கு இது போன்ற சில கேடுகெட்ட தினங்கள் கூட வேடிக்கை என்னவென்றால் ஐநா சபையோ மற்றவர்களோ நாட்டிலுள்ள அமைப்புகளோ ஏதாவது ஒரு தினத்தை கொண்டாட்டம் என்று அறிவித்த உடனே நாமும் சேர்ந்து கொள்கிறோமல்லவா எந்த அடிப்படையில் முஸ்லிம்கள் சேருகிறார்கள் அப்படி ஒரு விசேஷ தினத்தை ஏற்றுக் கொள்ள முஸ்லிம்களுக்கு அதிகாரம் இல்லை.

இவர்களுக்கு என்று ஒரு பைளாதா இருக்கிறது ஒரு ஷரிஅத் இருக்கிறது ஒரு வேடு புத்தகம் இருக்கிறது அதற்கென்று ஒரு ரசூல் இருக்கிறார் அவர்களுக்கென்று நடைமுறைகள் உண்டு அவைகளைத் தாண்டி போபவனும் வருபவனல்லாம் ஒவ்வொரு தினத்தை அறிவித்தால் அந்த தினத்தை எல்லாம் எடுத்துக் கொண்டாட கூடிய தார்மீக இடத்தில் நாம் இல்லை எந்த அடிப்படையில் இதை நாம் அனுமதிக்க முடியும் அல்லது கொண்டாட முடியும் நாமும் சேர்ந்து கொள்ள முடியும் திரும்பத் திரும்ப நாம் நினைவில் வைத்து கொள்ளவேண்டிய திருக்குர்ஆன் வாக்கியம் இது.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். திருக்குர்ஆன்  5:3

எந்த மத வழிபாடுகளோ எந்தக் கூட்டத்தாரின் பண்டிகைகளோ எந்த நாட்டிலாவது செய்யப்படுகிற விசேஷங்களோ இவைகள் எல்லாம் தீனுல் இஸ்லாத்தை பழுதுபடுத்துவதற்கு முயற்சிப்பதை போன்று முஸ்லிம்களும் அதிலே சேரக்கூடாது. அல்லாஹ் சொல்லுகிற வார்த்தையை திரும்ப ஒரு தடவை நாம் யோசித்துப் பாருங்கள். அல்லாஹ்வுடைய வார்த்தை.

வேற யாரும் நமக்கு வந்து கருத்தால் கொள்கையால் கோட்பாட்டால் பழக்கவழக்கத்தால் நடைமுறையால் எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தீனன் கியமன் ஆக உச்சகட்டமான நேர்வழி எதுவோ அந்த ஒரு நேர்வழியை அல்லாஹ் கோடிடுக் கொடுத்து இதிலே போ என்று சொன்னதற்கு பிறகு அவனும் இவனும் கொண்டாடுகிறான் என்று அர்த்தம்வச்ச தினங்களை எல்லாம் உலகத்தினுடைய எந்த முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளக்கூடாது மட்டுமல்ல. இந்த தினங்களில் ஒன்றிரண்டு உறவுகளை வலியுறுத்துவதாக சொல்லப்பட்டாலும் அதிகமான தினங்களை பார்த்தால் ஆபாசத்தை விளைவிக்கிற தினங்களாகவே இருக்கிறது தற்போதைய காதலர் தினம் உட்பட வர வர பிப்ரவரி 14 என்பது மிகப்பெரிய கமர்சியல் தினமாக வணிக லாப நோக்கில் அணுகப்படுகிற தினமாக மாறி உலகம் முழுக்க அதற்காக வேண்டி விற்றுக் கொண்டிருக்கிற வாழ்த்து அட்டைகளுக்காகவும் அதற்காக வேண்டி விற்றுத்திரிகிற சிவப்பு ரோஜாக்களுக்காகவும் காதலிகளுக்கு அன்பளிப்பு தர வேண்டும் என்று ஊக்குவிக்குகின்ற முகங்களாகவும் ஒன்று ஆபாசத்தை வளர்க்கிறது இல்லாவிட்டால் யாரோ வயிறு நிரப்ப வணிக மயமாக ஆக்குவதற்காக வேண்டி ஒரு மோசமான நாளை தேர்வு செய்து ஊர் உலகத்தில் அவைகளை அலைய விடுகிறார்கள் இந்தப் பண்டிகைக்கு காரணமாக சொல்லப்படுகின்ற valentain என்பவன் கிறிஸ்தவ பாதிரி பல்வேறு வரலாறுகள் எப்படி இருக்கும் சொல்லப்பட்டாலும் அதிகமானவர்களால் சொல்லப்பட்ட வரலாற்றின் படி கிறிஸ்தவ பாதிரியின் நினைவாளும் கொண்டாடப்படுகிற ஒரு தினத்திற்கு முஸ்லிம்கள் எந்த வகையிலும் தொடர்புடையவர்கள் அல்ல மருந்துக்கு கூட அவைகளை எல்லாம் நம்முடைய இளவல்கள் குறிப்பாக இளைஞர்கள் அப்படிப்பட்ட ஒரு தினமாக அனுஷ்டிப்பதையோ குதூகலப்படுத்துவதையோ வார்த்தைகளுக்குள் அவைகளையெல்லாம் பேச்சு வார்த்தைகளாக வைத்துக்கொள்வதற்கோ ஒருபோதும் இந்த அன்னிய தீமைகளுக்கு இறையாகி விடக்கூடாது.

நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால்

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாறோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார். நூல் : (அபூதாவுத் 3512)

நூற்றுக்கணக்கான மார்க்கச் சட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய இந்த நபிமொழியின் சாரம் அதுதான். எந்த ஒரு மதமும் அது உருவாக்கி வைத்திருக்கின்ற அவர்கள் பின்பற்றக்கூடிய பல்வேறு கலாச்சாரங்களையெல்லாம் ஒரு முஸ்லிம் தன்னுடைய கலாச்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

வேடிக்கையும் வியப்பும் ரொம்ப ஆச்சரியம் மேலிடுகிற செய்தி என்னவென்றால் உலகம் முழுக்க ஒரு காலத்தில் பரவி கிடந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை ஆங்காங்கேபோய் அதை அடித்து ஒடுக்கியவர்கள் அந்த கலாச்சாரங்களை குழி தோண்டி புதைத்தவர்கள் அவர்கள் உருவாக்குகிற பண்டிகைகளுக்கு நாம் அடிமையாகி போகலாமா?

இஸ்லாமிய கலாச்சாரங்களை புதைத்த பூமியிலிருந்து தான் மேற்குலகத்தினுடைய வல்லரசு நாடுகளில் இருந்து தான் இது போன்ற ஆபாச தினங்கள் அறிவிக்கப்படுகிறது.

காதலர் தினமும் இன்னும் பல கன்றாவி தினங்களும் இவையெல்லாம் எந்த அடிப்படையிலும் முஸ்லிம்கள் அல்ல. உலகத்தில் எந்த சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு இளைஞர்கள் ஆண்களுக்கு இன்னும் யுவதிகளுக்கு ஒருபோதும் பொருத்தப்படாத அவர்களின் மண்ணும்,மரபும் விரும்பாத ஒரு பழக்க,வழக்கம் தான் பிப்ரவரி 14 என்ற பெயரில் மிக மோசமான இந்த பின்பற்றுதல்.

ஒரு 14 நூற்றாண்டுகளுக்கு முன் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்றைக்கு மெய்பட்டிருக்கிறது.

ரசூல் (ஸல்) அவர்கள் ஒருமுறை ஸஹாபாக்களிடத்தில் சொன்னார்கள்:-

நீங்கள் உங்களுக்கு முன் இருந்தவர்களுடைய பழக்க வழக்கங்களை அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். வார்த்தைக்கு வார்த்தை பின்பற்றுவீர்கள். ஒரு முழத்திற்கு ஒரு முழம் பின்பற்றுவீர்கள். ஒன்றும் விடாமல் பின்பற்றுவீர்கள்.

சஹாபாக்கள் கேட்டார்கள்: நாங்கள் யாரை பின்பற்றுவோம். யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திரும்ப கேட்டார்கள் சஹாபாக்கள் அவர்களையா! நாங்கள் பின்பற்றுவோம்? வெறுத்து ஒதுக்கப்பட்ட அவர்களின் கொள்கைகளை ஏன்? பின்பற்றுவோம். சொன்னார்கள்: (ஸல்) பின்பற்றுவீர்கள் எந்த அளவிற்கு போவீர்கள் என்றால் அவர்கள் செய்வதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள். சொல்லிவிட்டு சொன்னார்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் போய் அவர்கள் நுழைந்தால் நீங்களும் பின்னாடியே போய் ஏதாவது இருக்கும் என்று நுழைவீர்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் இன்றைக்கு கிறிஸ்தவர்களோ அல்லது மேற்கத்திய முஸ்ரிக்குகளோ ஏதாவது ஒரு பண்டிகையை உருவாக்கினால் ஒரு தினத்தை அறிவித்தால் அது புத்தாண்டு தினத்திலிருந்து காதலர் தினத்திலிருந்து ஏப்ரல் 1 முட்டாள் தினத்திலிருந்து என்னென்ன தினங்களெல்லாம் அறிவுடைமைக்கு அப்பாற்பட்டு சொல்லப்படுகிறதோ அத்தனை தினங்களையும் இன்றைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய முஸ்லிம்கள் யோசிக்க வேண்டும் (ஸல்) அவர்கள் சொன்னது போல அவர்கள் உடும்பு பொந்துக்குள் நுழைந்தாலும் நீங்களும் போய் நுழைவீர்கள் என்கிற நபி (ஸல்) அவர்கள் கேள்வி கியாமத்து நாள் வரை நம்மை பார்த்து ஏளனமாய் கேட்கிறது அந்த கேள்வி என்றைக்கும் உண்டு. ஆணையும் பெண்ணையும் காதல் என்கிற பெயரில் சேர்த்து வைக்கிற நிகழ்ச்சியை புனிதம் என்ற கருத்துக்கு இன்றைக்கு ஒட்டுமொத்த ஊடகமும் வேலை செய்கிறது.

இஸ்லாமிய ஒழுக்கங்கள்:

ஒரு மனிதனை உயர்ந்த கண்ணியத்திற்கு உயர்த்துவது அவனிடம் உள்ள ஒழுக்கம் மாண்புகளே! அந்த ஒழுக்கத்தை முழுமையாக கற்றுத்தருவது இஸ்லாம் மட்டுமே!

முதலில் இஸ்லாம் ஆண்களை கட்டுப்படுத்துகிறது.

நபியே! விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக. அவர்கள் தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணி காத்துக்கொள்ளவும். அது அவர்களுக்கு மிக பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.(குர்ஆன்: 23:30)

அலியே! (எதிர்பாராமல் ஒரு பெண்ணின் மீது சென்ற) பார்வையை மீண்டும் தொடராதே! ஏனெனில் எதிர்பாராமல் பட்ட முதல் பார்வை உனக்கு குற்றமில்லை. ஆனால் அடுத்த பார்வை உனக்கு கூடாது.(திர்மிதி)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒட்டுமொத்தம் மதீனாவின் பெண்கள் யார் கண்களிலும் பார்க்காத முடியாத வெட்க உணர்வை நான் நபி (ஸல்) அவர்களின் கண்களில் பார்த்தேன்.

பெண் ஒழுக்கங்கள்:-

நபியே! முஃமினான பெண்களுக்கு கூறுவீராக! தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளவும், மர்மஸ்தானங்களை பேணிப்பாது காத்துக்கொள்ளவும். (குர்ஆன்: 24.31)

பெண் முழுமையாக மறைக்கப்பட வேண்டியவள்.அவள் வீட்டை விட்டு வெளியேறினால் சைத்தான் அவளை கூர்ந்து கவனிக்கிறான்.(அவளின் மூலம் ஆண்களை வழிகெடுப்பதற்காக). (திர்மிதி)

உலகில் செல்வங்களிலேயே மிக உயர்ந்த செல்வமாக நல்லொழுக்கப் பெண்ணை” இஸ்லாம் காண்கின்றது.

படிக்கும் இளைஞர்களே!

காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.

இளைஞர்களே!

உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு, கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவ வோம்.

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்தலும் பிள்ளைகளிடத்திலம் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் ஆதமின் மகன் மீது விபச்சாரத்தின் பங்கை எழுதிவிட்டான். அவன் அதை அடைந்தே தீருவான். (இச்சையுடன் அந்நிய பெண்களைப்) பார்ப்பது கண்களின் விபச்சாரம்.அவர்களின் சப்தத்தை கேட்பது காதுகளின் விபச்சாரம்.அவர்களிடத்தில் பேசுவது நாவின் விபச்சாரம் ஆகும். அவர்களை தொடுவது கைகளின் விபச்சாரமாகும். அவர்களை சந்திக்க நடப்பது காலின் விபச்சாரமாகும். இவைகளுக்காக மனம் ஆதரவைக்கும் வெட்கஸ்தளம் அதை மெய்ப்பிக்கும் அல்லது பொய்ப்படுத்தும் (புஹாரி, முஸ்லிம்)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.ச செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது . பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல் போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும் சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம் எனலாம். இத்தகைய உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள், தெரிந்துக் கொண்டே இந்த ஆபாசதினத்தை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் அதில் இணையவும் முன்வரக் கூடாது; முன்வரமாட்டார்கள்

இன்று அன்னிய ஆணும் பெண்ணும் சந்திப்பதும்,பேசுவதும்,உல்லாசமாக சுற்றித்திரிவதும் தவறில்லை என்று நியாயப்படுத்தப்படுகிறது.அதனால் கல்வியை சுமக்க வேண்டிய பெண்கள் கருவை சுமக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

உலகம் முழுவதிலும் ஆண்டுதோறும் 40 லட்சம் குழந்தைகள் திருமணம் ஆகாமலேயே பிறக்கின்றனர்.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 20% குழந்தைகள் தேவையில்லாதவைகளாக வெறுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஒரு கோடியே 10 லட்சம் ஆபரேஷன்கள் (கருகலைப்பு) நடத்தப்படுகின்றன என்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

 இதுபோன்ற சூழ்நிலை சமுதாயத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக தான் இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது.

”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒருபெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்யவேண்டாம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 3006: 5233.; முஸ்லிம்: 3336.)

“ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்” என்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதீ,முஸ்னத் அஹ்ம)

“நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.” (அல்குர்அன் 33:32)

எனவே இஸ்லாம் கூறுகிற ஒழுக்க நெறிகளைப்பேணி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! அல்லாஹ் அதற்கு தவ்பீக் செய்வானாக! ஆமீன்…

பொதுமக்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடியது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் “புகை பிடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!” முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத் தெரிந்திருந்தும் “பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை” அரசே நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் ரெட் லைட் ஏரியா என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற “மக்களைப் பாதுகாக்கும்(?) அரசு”கள்.

“என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்” என்ற எதிர்பார்ப்புடன் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள்தாம் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, பண்பாட்டைப் பேணுகின்ற எந்தக் கலாச்சாரத்துக்கும் எவ்வகையிலும் ஒவ்வாத இந்த ஆபாச தினச் சிந்தனையில் உள்ள தீமைகளைக் குறித்த போதிய அறிவு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பள்ளிப்பருவத்தையும் விட்டு வைக்காத இந்தக் கேடுகெட்ட கலாச்சாரச் சீரழிவில் விழுந்து விடாமல் வளரும் தலைமுறையைக் காக்க இயலும்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகைள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

உங்களுக்கென்று இறைவன் ஒரு மார்க்கத்தை தேர்வு செய்துவிட்டான்.

எனவே நீங்கள் அந்த மார்க்கத்தை பேணுகின்ற முஸ்லிம்களாகவே தவிர வேறு எந்த ரூபத்திலும் மரணித்து விட வேண்டாம்!

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது