Posts

Showing posts from January, 2024

பிப்ரவரி 14 காதலர் தினம் ஆபாச தினம் கற்பு கொள்ளையர் தினம்.

Image
  பிப்ரவரி 14 காதலர் தினம்,  ஆபாச தினம், கற்பு கொள்ளையர் தினம், உலகத்தில் ஐ.நா.சபை ஆண்டுதோறும் இருக்கிற ஒரு வருஷத்தினுடைய 365 தினங்களுக்கும் ஒவ்வொரு பெயரை வைத்து விட்டது. ஏறத்தாழ இன்னும் கொஞ்சநஞ்ச தினங்கள் தான் பாக்கி. அன்னையர் தினம், தந்தையர் தினம் எல்லா தினங்களும். அந்த வரிசையில் ஒட்டுமொத்த மனித உலகை பிடித்திருக்கிற முஸீபத்தான ஒரு தினம் காதலர் தினம் பிப்ரவரி 14 வருகிற போது உலகத்தினுடைய அசிங்கமான சக்திகள் அத்தனையும் இதில் உருவெடுத்துக்கொள்கிறது. கெட்டுப்போன கலாச்சாரங்களை எல்லாம் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளுதா உலகம் என்று யோசிக்க தக்க ஒரு ஆபாசமான சூழ்நிலைகள் இன்றைக்கு பரவி இருப்பதை பார்க்கிறோம். இஸ்லாமிய பெருநாட்கள் என்றால் இரண்டு பெருநாட்கள் பெரிய பெருநாட்கள் ரமலானும்,பக்ரீத்தும் அதை தாண்டி பெருநாட்கள் என்றால் ஒவ்வொரு ஜும்ஆவும் பெருநாட்கள் ஏனைய விசேஷங்கள் என்றால் குர்ஆனும் ஹதீஸும் வலியுறுத்துகின்ற லைலத்துல் கதிர் இரவு, முஹர்ரம் ஆஷுராவுடைய நாள், துல்ஹஜ்வுடைய அரபா நாள் மார்க்கம் வரையறுத்ததைத் தாண்டி எந்த ஒரு தினங்களும் எந்த ஒரு விசேஷங்களும் நம்முடைய கொண்டாடத்திற்கு அனுமதி இல்

ரஜப் மாதத்தின் (அமல்களும் - பித்தாத்க்களும்)

Image
ரஜப் மாதத்தின் ( அமல்களும் - பித்தாத்க்களும்)  அல்லாஹ்வின் மாதமான ரஜப் ( رجب‎) மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம்.  ரஜப் ( رجب‎) : இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும் இது. அத்துடன், அல்லாஹஹ் புனிதமாதமாக்கிய சிறப்புற்ற நான்கு மாதங்களில் ஒரு மாதமாகும்,  இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும். இஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ரஜப் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும். ரஜப் என்ற சொல்லின் வரையறை, "மரியாதை" ஆகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இசுலாத்திற்கு முன்பும் அரபிகள் நான்கு மாதங்களில் போர் புரிவதை தடுத்தனர்  ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடங்கி இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் வரை அனைத்து நபிமார்களின் சமூகத்தாருக்கும் மாதங்களை இவ்வாறு தான் அல்லாஹ் அமைத்தான். வருடத்துக்கு 12