ரபீவுல் ஆகிர்ரும் முஹ்யித்தீன் ஆண்டவரும்,

 


ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்தாலே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கேறும் வழிகெட்ட அனச்சாரங்கள் மௌலிது மற்றும் பெரு விழா

ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டது.

 முஹ்யித்தீன் ஆண்டவர்(?) ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91 வது வயதில் வபாத்தானார்கள். அன்னாளில் விழா கொண்டாட்டங்கள் குதூகலத்துடன் தொடங்கப்போகின்றன. இதயத்தில் இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச ஈமானும் கொடிமரங்களில் இனி தஞ்சமடையப் போகின்றன. (நவுது பில்லாஹ்) அல்லாஹ் நம்மைக் காப்பானாக. 

தூய இஸ்லாத்தில் இல்லாத திருவிழாக்களும் வழிகேடுகளும் மாற்றார் எள்ளி நகையாடும் விதத்தில் முஸ்லிம்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களால் இன்னமும் அரங்கேற்றப் படுவதைக் கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!

அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அநாச்சாரங்களில் முஹ்யித்தீன் அப்துல்; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் தான் கொடுமையிலும் கொடுமை. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் அந்தந்த ஊர்களில் தான் நடக்கின்றன. ஆனால் தமிழகமெங்கும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் கேளிக் கூத்துக்கள் சொல்லி மாளாது.

உருது பேசும் முஸ்லிம்களிடம் காணப்படும் வழிகெட்ட அனச்சாரங்கள்,

ரபீவுல் அவ்வல் மாதத்தில் பார்வி (12) பாத்தியா என்றும், (இது நபி (ஸல்) அவர்களுடைய வபாத்தானா நாள்)

ரபீவுல் ஆகிர் மாதத்தில் கியர்வி (11) பாத்தியா என்றும்,  (இது காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய வபாத்தானா நாள்)

 பாத்தியா என்ற பெயரில் குடும்பத்துக்குள் விருந்து சில பேர் உறவினர்களுக்குள் விருந்து ஊருக்கு ரெண்டு பேர் விதம் ஊர் விருந்து வழங்குவது பழக்கத்தில் உள்ளது,

ரபீவுல் ஆகிர் மாதம் வந்து விட்டால் அப்துர; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் பள்ளிகள் தோறும் பரவசமாக முஹ்யித்தீன் மௌலிது ஓதப்படுவது ஷிர்க்கின் உச்சக் கட்டம்.

அல்லாஹ்வை வணங்க கட்டப்பட்;ட பள்ளிவாசல்கள் என்னும் இறையில்லங்களில் அல்லாஹ்வை அழைத்துப் பிராத்திப்பதை விட்டு விட்டு ஒரு மனிதரை அழைத்துப் பிரார்த்திப்பது பச்சையான ஷிர்க் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இதை உணர மாட்டீர்களா? பக்திப் பரவசத்துடன் அர்த்தம் புரியாமல் ஓதிக் கொண்டிருக்கிறீர்களே! அதை ஓதிக் கொண்டிருக்கும் மௌலவி மார்களிடமே அதன் அர்த்தத்தைப் கேட்டுப் பாருங்கள் அப்போது தான்; அது எவ்வளவு பெரிய ஷிர்க் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

 முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வபாத்தானா நாள் விழாவைக் கொண்டாடுவது மிகப் பெரும் வழிகேடல்லவா? நான்கு கொடியை பக்தி சிரத்தையுடன் தூக்கி ஊர்வலம் செல்வதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும், அதற்காக நேர்ச்சை செய்வதும் இவை யாவும் நரகப் படுகுழியில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இஸ்லாம் நமக்கு வழங்கிய இரு பெரு நாட்களையும் விடச் சிறப்பாகவும் குதூகலமாகவும் இந்தக் ‘கொடிச்சீலை’த் திருவிழாவைக் கொண்டாடும் நெஞ்சங்களே அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா? 

இஸ்லாம் அனுமதித்த  இரு பெருநாட்களுக்காகக் கூடத் தங்கள் அரபு நாட்டு விடுமுறையைத் தள்ளிப் போடாதவர்கள் இந்த அநாச்சார விழாவுக்காக உங்கள் விடுமுறையை மாற்றி அமைத்து இஸ்லாத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே!

 ஏகத்துவப் பிரச்சாரங்கள் தினந்தோறும் உங்கள் செவிகளை வந்தடைந்த போதும் அவற்றைத் துச்சமென மதித்து ‘இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்?’ என்ற பாணியில் நரகப்படுகுழியை நோக்கி வெகு வேகமாகப் பயணிக்கின்றீர்களே! கொழுந்து விட்டெரியும் அந்த நரக நெருப்பை அஞ்சமாட்டீர்களா?

 அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மீது காட்டும் பக்தியையும் சிரத்தையையும் அல்லாஹ்வின் மீது காட்டுங்கள் இல்லையேல் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவீர்கள். 

நன்மையும் தீமையும் மார்க்கத்தில் தெளிவாக்கப் பட்டுவிட்டன. தீயவை எவை என்பதில் நமக்கு குழப்பமில்லை. ஆனால் நன்மை என கருதிக் கொண்டு தீமையைச் செய்தால் ஏற்படும் இழப்பு தான் உண்மையில் பேரிழப்பாகும்.

அறிந்துக் கொண்டே பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்பவன் பிடிபட்டு தண்டிக்கப்பட்டால் அது நியாயம் தான். ஆனால் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்று மிகவும் ஆடம்பரமாகப் பயணத்தை மேற்கொள்ளும் போது பரிசோதனையில் அது போலியானது எனத் தெரிய வந்து நீங்கள் தண்டிக்கப்பட்டால் எவ்வளவு வேதனைப்படுவீர்கள்?

அறிந்து கொண்டே தவறுகளைச் செய்தவன் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவது உறுதி. நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் உரைகல்லாக அல்லாஹ்வின் திருமறையும் அவனது திருத்தூதரின் வழிகாட்டுதல்களும் தௌ;ளத் தெளிவாக நம் முன்னே இருக்கும்போது அவற்றை ஏரெடுத்துப் பார்க்காமலும், செவி தாழ்த்திக் கேட்காமலும் ‘முன்னோர்கள் காட்டிய வழி’ என்று அநாச்சாரங்களிலும், வழிகேடுகளிலும் பிடிவாதம் காட்டுவீர்களானால் அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.

இது நாள்வரை அறியாமையினால் இந்த கொடிச்சீலை விழாவைக் கொண்டாடி இருந்தால் அறியாமல் செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் அழுதழுது மன்னிப்புக் கேளுங்கள். இந்த அநாச்சார விpழாவை இனி கொண்டாடுவதில்லை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சபதம் செய்யுங்கள்.

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும் (திருக் குர்ஆன் 7:194)

மார்க்கத்தைக் குறைவின்றி முழுமையாகக் கற்றுத் தருவதற்காகவே தூதர்களை அல்லாஹ் நியமிக்கின்றான். இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாக இந்த மார்க்கத்தைப் பூரணப்படுத்தியதாகவும் இறைவன் பிரகடணம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

மார்க்கத்தை இறைவன் நிறைவாக்கியிருக்க, பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் எப்படி நல்லறமாக ஆக முடியும்? உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!(அல்குர்ஆன் 7:3)

இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மாத்திரமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும் என இவ்வசனம் கூறுகிறது. இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்றால் அவனது வேதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்; அல்லது அந்த வேதத்திற்கு விளக்கமளிக்க இறைவனால் நியமனம் செய்யப்பட்ட அவனது தூதர் கூறியிருக்க வேண்டும்.

மவ்லிதுக் கச்சேரிகள் நடத்தும்படியோ, இதை நடத்துவதால் இறைவனது அன்பும், இறைத்தூதரின் பரிந்துரையும் கிடைக்கும் என்றோ, இறைவனும் கூறவில்லை. அவனது தூதரும் கூறவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை வியாபாரமாக்கும் முல்லாக்களைத் தவிர வேறு எவரும் இந்தக் கச்சேரியை நடத்துமாறு கூறவில்லை.

‘இந்தக் குர்ஆனின் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையிலுள்ளது. மறுபகுதி உங்கள் கைகளில் உள்ளது. எனவே அதனையே நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள். நீச்சயமாக நீங்கள் வழி தவற மாட்டீர்கள்! அதன் பிறகு நீங்கள் (மறுமையில்) நாசமாகவும் மாட்டீர்கள்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி) நூல்: தப்ரானி 22/188

திருக்குர்ஆனையும், நபிவழியையும் தவிர பிறவற்றை மார்க்கம் என்று சொல்வதற்கு இடமே இல்லை. அவ்விரண்டையும் பேணி நடப்பதிலும், அவ்விரண்டில் இல்லாதவற்றைத் தூக்கி எறிவதிலும் தான் ஈடேற்றம் உள்ளது என்பதை இந்த நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லுதுக் கச்சேரிகள் நிறுத்தப்பட வேண்டுமென்பதற்கு இவையும் சான்றுகளாகும்.

தமது காலத்துக்குப் பின்னர் பலவிதமான அனாச்சரங்கள் தோன்றும். அவை அனைத்தும் மனிதனை நரகின் பால் இழுத்துச் செல்லும் எனவும், இறைவனிடம் அவை அங்கீகரிக்கப்படாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.

‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 2697

‘செய்திகளில் சிறந்தது, இறைவனின் வேதமாகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது(ஸல்)வின் வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகவும் கெட்டது (எனக்குப் பின்னர்) உருவாக்கப்பட்டவையாகும். (இவ்வாறு) உருவாக்கப்பட்ட காரியங்கள் யாவும் அனாச்சாரங்களாகும். அனாச்சாரங்கள் யாவும் வழிகேடாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1435

‘நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு காரியத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 3243

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு பின் உருவாக்கப்பட்ட காரியங்கள் எதுவானாலும் அவை இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்றும், அவை வழிகேடு என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்த பிறகும், உண்மையான முஸ்லிம் எப்படி இந்த மவ்லிதுகளை ஓத முடியும்? நன்மை செய்கிறோம் என்று எண்ணி பாவத்தைச் சுமக்க முன் வருபவர் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது