Posts

Showing posts from May, 2024

குர்பானி எனும் உன்னத வணக்கத்தை நிறைவேற்றுவோம்

Image
குர்பானி எனும் உன்னத வணக்கத்தை நிறைவேற்றுவோம்; குர்பானி அல்லாஹ்வுக்காகவே மட்டும் செய்யப்பட வேண்டிய ஓர் வணக்கம்: அல்லாஹ் கூறுகின்றான்: “எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (அல்-குர்ஆன் 108:2) மேலும், குர்பானி எனப்படும் அறுத்துப் பலியிடும் வணக்கத்தை தனக்காக மட்டும் நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ் தனது திருமறையில் வலியிறுத்தியிருக்கின்றான். “நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.” (அல்-குர்ஆன் 6:162) அல்லாஹ்வுக்காகவே மட்டும் செய்யப்பட வேண்டிய குர்பானியை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்தால் அது இணைவைப்பாகும்: “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிட்டவனை அல்லாஹ் சபிப்பானாக” அறிவிப்பவர்: அலி (ரலி); ஆதாரம்: முஸ்லிம். எனவே, குர்பானி என்பது அல்லாஹ் ஒருவனுக்கே நிறைவேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும் என்பதை நன்கு நினைவில் கொள்ள வேண்டும. யார்மீது கடமை? குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும்